இந்தக் கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லையாம்

  கோமதி   | Last Modified : 11 Jul, 2018 08:38 pm
women-are-not-allowed-in-this-temple

தமிழகத்தில்  பெண்கள் வழிபாட்டுக்கு இல்லாமல், ஆண்கள் மட்டுமே வழிபடக்கூடிய திருக்கோயில் ஒன்று அமைந்துள்ளது. கரூரிலிருந்து பழநி செல்லும் வழியில், ஒட்டன்சத்திரத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில்அமைந்துள்ளது மாம்பாறை முனியப்பன் கோயில்.

இந்த திருக்கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி  கர்நாடகா, கேரளா,ஆந்திரா என பக்கத்து மாநிலங்களில் இருந்தெல்லாம்  பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். புதிதாக வியாபாரம் செய்ய நினைப்பவர்கள் , தொழில் துவங்குபவர்கள், பணம் கொடுத்த இடத்தில் திரும்பக் கிடைக்காதவர்கள் இத்திருத்தலம் தேடி வந்து வழிபட்டு செல்கின்றனர்.

பெண்களூக்கு இங்கே அனுமதி இல்லை

கரூரிலிருந்து பழநி செல்லும் வழியில் மலைகள் நிறைந்த இயற்கையான சூழலில் அமைந்துள்ளது மாம்பாறை முனியப்பன் கோயில்.
பிரமாண்டமான மூன்று குதிரைகளின் சுதை வடிவங்கள். அதன் முன்பு வேல்கள் நடப்பட்டிருக்க அருகே வெள்ளியால் செய்யப்பட்ட முனியப்பனின் கண் உருவத்துடன் மனதில் நிறைகிறது கோயில் அமைப்பு.

நாள்தோறும்  ஆண் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற இந்த திருக்கோயிலை தேடி வருகிறார்கள்.. பிறந்த பெண் குழந்தைகள் உட்பட பெண்கள் இந்த திருக்கோயிலுக்கு  வந்ததில்லையாம். 

பெண்கள்  இந்த திருக்கோயிலுக்கு வராமல் இருப்பதற்கு காரணமான  சம்பவம் இதோ.

முன்னொரு காலத்தில் மலைமேல் ஒரு மாமரம் இருந்தது. அதில் ஒரு கனி மட்டுமே பழுத்துத் தொங்கியது. அந்த அதிசயக் கனியை ஆற்றல் மிக்க கனியாக மாற்றுவதற்காக, அந்த மாமரத்தின் கீழ் அமர்ந்து முனிவர் ஒருவர் தவம் செய்தார்.அப்போது அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த தம்பதியர் கண்ணில் அந்த மாங்கனி பட்டுவிட்டது.

மனைவிக்கு அந்த மாங்கனியை சாப்பிட ஆசை ஏற்பட்டு விட்டது.  மனைவியின் ஆசையை அறிந்த  கணவன் கல்லை மாங்கனி மீது எறிந்து கனியை வீழ்த்தி விட்டான்.

இதனால் ஆத்திரமடைந்த முனிவர், இனி இந்த மலைப்பகுதிக்கு பெண்களே வரக்கூடாது என சாபமிட்டதோடு, தன்னுடைய தவ ஆற்றலால் மாங்கனியை மீண்டும் மரத்திலேயே இருக்கும்படி செய்தார். இதுவே இன்றுவரை பெண்கள் யாரும் இப்பகுதிக்கு வராமல் இருப்பதற்கான காரணம் என்கிறார்கள் 

மாம்பாறை முனியப்ப சாமிக்கு வேண்டுதலை நிறைவேற்ற வரும் ஆண்கள் கிடா வெட்டி, தாங்களாகவே அம்மியில் மிளகாய் அரைத்து, வெங்காயம் உரித்து, பொங்கல் வைத்து என, சகல சமையல் வேலைகளையும் செய்து முனியப்பனுக்கு பூஜை செய்கிறார்கள்.

இங்கு இறைவனுக்கு படைக்கப்பட்ட  பிரசாதங்கள் எவற்றையும் வீட்டுக்குக் கொண்டு செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close