பரிகாரங்களும் ...நம்பிக்கைகளும் - குழந்தைகளுக்கு முதல் மொட்டை போடுவது இதற்கு தானாம்

  கோமதி   | Last Modified : 12 Jul, 2018 08:44 pm
remedies-and-beliefs-this-is-the-reason-for-head-shaving

நாம் பின்பற்றும் பல சடங்குகளின் பின்னணியில் விஞ்ஞான ரீதியான தாத்பரியங்கள் அடங்கியுள்ளது. இங்கே காரணம் இல்லாமல் எந்த ஒரு காரியமும் நடைபெறுவதில்லை. தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் கூட சாமி ....வழிபாடு என்றால் கேட்டுக் கொள்வார்கள். அதனால் தான் நம் முன்னோர்கள் நிறைய விஷயங்களை ஆன்மீகத்தின் சாயலில் சடங்குகள் சம்பிரதாயங்களாக ஏற்படுத்தியுள்ளனர். அதில் ஒன்று தான்,குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது. 

நம்முடைய தமிழ் மரபில், இது பலருடைய குடும்ப வழக்கம். இறைவனுக்கான நேர்த்திக்கடன் என்று இன்றளவும் நாம் பின்பற்றி வருகிறோம்.இன்னும் சொல்லப் போனால் இதை ஒரு பெரிய விழாவாகவே பலரும் சொந்த பந்தங்கள் புடை சூழ நடத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?

பிறக்கும் முன் தாயின் கருவறையில் ரத்தம், சிறுநீர், மலம்  நிறைந்த சூழலில் இருந்த நம்மை சுற்றி, கழிவுகள் நிறைந்து இருக்கும். உடலினுள் தேங்கியுள்ள  இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும்.  அதற்கான வழிகள் குறைவு என்பதால் தான், குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போட வேண்டும் என்கிறார்கள். 

ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் நமது தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான காரணியாக அமைந்து விடும் வாய்ப்புகள் அதிகம். 

இந்தக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள் என்பதால் தான்  நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்கள் இந்த நிகழ்வை மதச் சடங்காகவே ஏற்படுத்தியுள்ளார்கள். குழந்தை சற்று வளர்வதற்குள் மூன்று மொட்டை போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது, மூன்றாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.

நம் முன்னோர்கள் போட்டுக் கொடுத்த பாதையை பின்பற்றினாலே போதும், நம்முடைய வாழ்க்கை மேன்மையடையும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close