வாழ்வில் வளம் சேர்க்கும் சிவன் மலை

  கோமதி   | Last Modified : 13 Jul, 2018 08:05 pm
sivan-malai-that-enriches-life

பஞ்சாலைகளுக்கும், விருந்தோம்பலுக்கும் புகழ் பெற்ற கொங்கு மண்டலத்தில் காங்கேயத்திற்கு அருகில் 4 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பூர் செல்லும் சாலையில் உள்ளது சிவன் மலை. 18 சித்தர்களில் ஒருவரான சிவவாக்கிய சித்தர் வழிபட்ட திருத்தலம் இது. கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் மலை மீது அமைந்துள்ள இந்த திருக்கோயில் 496 படிகளை கொண்டது. படிகள் வழியாகவும், மலைப்பாதை வழியாகவும் ஆலயத்தைச் சென்றடையலாம். கிழக்கு நோக்கி அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி ஆலயம். சங்க காலத்தில் சமய கேந்திரமாக மட்டுமின்றி வணிக கேந்திரமாகவும் இருந்தது. கிரேக்கர்களும், யவனர்களும் இங்கு வணிகம் செய்துள்ளனர்.

மும்புரம் எரித்த சிவபெருமான், இமயமலையை வில்லாக வளைத்த போது, அதிலிருந்து சிதறி விழுந்த துண்டுதான் சிவன் மலையானது என்பர். சஞ்சீவி மலையை ஹனுமான் எடுத்து வருகையில், அதன் துண்டு விழுந்ததாகவும் அதுவே சிவன் மலை என்று கூறுவோரும் உண்டு. இதற்கு ஆதாரமாக மலையடிவாரத்தில் உள்ள அனுமன் கோயிலை சுட்டிக்காட்டுகின்றனர் காங்கேயம் மக்கள். சேய்மலை, சேமலை, பட்டாலியூர், என வேறு பெயர்களும் சிவன் மலைக்கு உண்டு. 

சிவன் மலை புராணம், சிவன் மலைக் குறவஞ்சி,திருப்புகழ், திருமுருகாற்றப்படை, மயில்விடு துாது ஆகியவற்றில் சிவன் மலை குறி்ப்பிடப்பட்டுள்ளது. இடப்புறம் மயில் வாகனத்துடன் வள்ளியுடன் கருவறையில் கம்பீரமாக காட்சி தருகிறார் சுப்பிரமணிய சுவாமி. சிவன் மலைக் காங்கேயன், சிவாச்சல வேந்தன், சிவாத்ரிநாதன், சிவசுப்பிரமணியன், காங்கேயன், மரகதமயூரன் என்றும் இங்குள்ள முருகனை அழைக்கிறார்கள். மகிமை சேர் சிவமலை, தவசபுரி சிவன் மலை, சக்தி சிவன் மலை என்ற பெயர்களும் உண்டு. 

கல்யாணகோலத்தில் வள்ளியம்மையுடன் முருகப் பெருமான் கிழக்கு திசை நோக்கி காட்சி தருகிறார். முருகப்பெருமானின் மயில் கிழக்குதிசை நோக்கி உள்ளது. இந்திரனே மயிலாக உள்ளார் என்றும் கதைகள் உண்டு. வள்ளியை கவர்ந்து வந்த முருகப்பெருமானை பின்தொடர்ந்த வேடர்களைப் போரில் முருகன் மாய்த்தார். பின்னர் வள்ளியின் வேண்டுகோளுக்கிணங்க அவர்ளை மீண்டும் அவர் உயிர்ப்பித்தார். இதன் காரணமாக பட்டாலியூர் என்றும் இந்த தலம் அழைக்கப்படுகிறது. மலையடிவாரத்தில் நஞ்சுண்டேஸ்வரர் சன்னிதி ள்ளது. அடுத்து வருவது பாலவிநாயகர் சன்னிதி. நுழைவாயிலில் உச்ச விநாயகர் தனி சந்நிதி கொண்டுள்ளார். வெளிச்சுற்றில் சிவ சூரியனும், எதிரே புளியமரத்தடி விநாயகர், அடுத்ததாக கிழக்கு நோக்கிய திசையில் ஞானம்பிகை, கைலாயநாதர் சந்நிதிகள் உள்ளன. சிவன் மலையில் இரண்டு சண்டிகேசுவரர்களை தரிசிக்கலாம்.

சிவன் மலையில் தட்சிணாமூர்த்தி குகனின் ஆயுதங்ள் அனைத்தையும் கொண்டுள்ளார். மேற்கரங்களில் வேலும் சக்திஆயுதமும் தாங்கிய அவர் குகதட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். திருச்சுற்றில் கன்னிமூலை கணபதி,தண்டாயுதபானி, துர்க்கை குகசண்டிகேசுவரர் சன்னிதிகள் உள்ளன. தண்டாயுதபானி சன்னிதி எதிரே தலமரமான தொட்டி மரம் உள்ளது. நவகிரக சந்நிதியில் சூரியனைப் பார்த்தபடி எட்டு கிரகங்கள் உள்ளதோடு, சனீஸ்வரருக்கு கிழக்கு நோக்கியபடி தனி ஆலயம் உண்டு. கருவறையில் மூலவர் முருகனுக்கு வலப்புறம் வள்ளியின் சிலையும், அவருக்கு முன்னே சிவலிங்கமும் உள்ளன. 

முருகனுக்கு உகந்த தைப்பூச திருவிழா இங்கே அறுபடை விழாவாக கொண்டாடப்படுகிறது. பூ கேட்டல் இந்த ஆலயத்தில் முக்கியமான பிரார்த்தனையாகும். இந்த பக்கத்தில் எந்த காரியமும் மேற்கொள்ளப்பட்டாலும் சிவன் மலை முருகன் பாதத்தில் வைத்து, வேண்டியே அதனை துவங்குவர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close