திருமண தடை நீக்கும் பரிகாரங்கள்

  கோமதி   | Last Modified : 22 Jul, 2018 01:20 am
marriage-barrier-remedies

வீட்டில் உள்ள மகனுக்கோ,மகளுக்கோ காலா காலத்தில் திருமணம் ஆகா விட்டால் பெரியவர்களுக்கு மனக் கவலை அதிகரிக்கும். திருமண தடைகளை நீக்க நிறைய பரிகாரங்களும்,தோஷ நிவர்திகளும் இருந்த போதிலும் யாருக்கு எது பொருந்துமோ அதை செய்வது தான் பலன் தரும். இந்தப் பதிவில் திருமண தடை நீக்கும் சில பரிகாரங்ளைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்

திருமாலின் மனம் நிறைந்தவளான துளசி மாதாவை வணங்கி துளசி கல்யாணம் செய்தால் விரைவில் திருமணமாகும்.

ஜாதகத்தில் 7-ல் ராகு இருந்தால் அது கடுமையான திருமண தோஷமாக கருதப்படுகிறது. இந்த தோஷம் இருந்தால்,எவ்வளவு முயன்றாலும் திருமணம் கை கூடுவதில் தடங்கல் இருந்துக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வரலாம். இவ்விரதம் ஒன்பது வாரங்கள் செய்து வர திருமணம் தோஷம் விலகும். திருமணம் கூடி வரும்.

சிலருக்கு ஜாதகத்தில்  செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணம் தடைபடும். அவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வந்தால்,விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஆலங்குடியில் வீற்றிருக்கும் குரு தட்சிணாமூர்த்தியை வணங்கினாலும் திருமண யோகம் உண்டாகும்.

ஜாதகத்தில் உள்ள தோஷங்களை தவிர தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களும் திருமணம் தடைக்கான காரணங்களாக சொல்லப்படுகிறது. அதற்கான சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது, மாயவரம்-குற்றாலம் நெடுஞ்சாலையில் உள்ள திருமணஞ்சேரி. இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் உடனே திருமணம் ஆகிவிடும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகமூர்த்திகளை வணங்கி அடிப்பிரதஷணம் செய்து, முடிந்த அளவிற்கு ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்தால்,சகல திருமண தோஷமும் தீரும்.
திருமண தடை நீங்க நவக்கிரகங்களை வணங்கும் போது, துணைவியருடன் இருக்கும் நவக்கிரகங்களை வழிபட உடனே திருமணம் நடைபெறும். 

திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடும் என்பது நம்பிக்கை. அதனால், திருவேற்காடு சென்று கருமாரியம்மனை தரிசித்து வரலாம்.
 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close