புத்திர பாக்கியம் வேண்டுவோர் செல்ல வேண்டிய கோவில்

  கோமதி   | Last Modified : 27 Jul, 2018 03:42 am
the-temple-to-go-to-the-wishes-of-the-child

குழந்தை வரம் கேட்டு கோயில் கோயிலாக சுற்றி வருபவர்கள்  நிச்சயம் தேடி செல்ல வேண்டிய இந்த ஆலயம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது.  இத்திருக்கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்த பலர் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்று அடித்துச் சொல்கின்றனர். பட்டுக்கு பெயர் போன ஆரணிக்கு அருகே உள்ள புதுக்காமூர் புத்திரகாமேஸ்வரர் ஆலயம் புத்திர பாக்கியம்வேண்டுபவர்கள் செல்ல வேண்டிய திருக்கோயில். 

இத்திருக்கோயிலில்அம்பாள் பெயர் பெரிய நாயகி. குலகுரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜா, புத்திரகாமேஷ்டி யாகம் செய்த பின்னர், இந்த ஆலயத்திற்கு வந்து ஈசனை சேவித்ததாக ஐதீகம். இத்தலத்தின் அருகே வடக்காக ஓடும் செய்யாற்றி்ல் நீராடி புத்திரகாமேஸ்ரவரரை சேவித்த தசரதனுக்கு, ராமன், லட்சுமணர். பரதன், சத்ருக்கனன் என மூன்று லோகமும் போற்றும் குழந்தைகள் பிறந்ததாக புராண கதைகள் உண்டு. இறைவன் ராமனை உலகுக்கு அருளிய தசரதனுக்கு இங்கே தனி ஆலயம் உண்டு. சித்தர் வடிவில் தவக்கோலத்தில் உள்ள அவரை வணங்கிய பிறகே படித்துறை வினாயகரை வணங்க வேண்டும். 

அரச மரத்துடன் வேம்பு இணைந்த மரத்தடியில் அநேக நாகர்கள் உள்ளனர் இவர்களை 108 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும். வில்வம். பவளமல்லி என இரண்டு தல விருட்சங்களை கொண்ட இந்த தலத்தில் பிரதோஷ வழிபாடு, ஆனி திருமஞ்சனம் போன்றவை சிறப்பாகும். ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம் என ஆலயங்களில் பூஜைகளுக்கும், விஷேசங்களுக்கும் பக்கத்து  மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு ஈசனை தரிசிக்கிறார்கள். 9 தலை  நாகம் ஈசனுக்கு குடை பிடிப்பது புதுக்காமூர் ஆலயத்தின் விஷேசம். நாகத்தை தரிசித்த பின்னர் அம்பாள் பெரிய நாயகியை வணங்கி, புத்திரகாமேஸ்வரரை தொழுது அர்ச்சனை செய்தால் கேட்டதெல்லாம் கிடைக்கும். ஆண்டுக்கு ஆண்டு ஆனி மாதம் பெளர்ணமியன்று நடக்கும் யாகத்தில் கலந்துக்கொள்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் அருளப்படுகிறது என்கின்றனர் ஆலய அர்ச்சகர்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்ட நகரங்களில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உண்டு. புதுக்காமூருக்கு வரும் பக்தர்கள் ஆரணி அருகே அமைந்துள்ள சனீஸ்வரர் ஆலயத்திற்கும் சென்று வரலாம். சனிக்கோளின் மையப் புள்ளியாக நாசாவால் அடையாளம் காணப்பட்ட அந்த ஆலயத்திற்கு செல்பவர்களுக்கு சனி பகவானின் பூரண அருள் கிடைக்கும் என்பதால் சனிஸ்வரன் பற்றிய அச்சங்கள் பஞ்சாக பறந்து போகும். தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. புத்திரகாமேஸ்வரர் அருளால் குழந்தை வரம் கேட்போர் இல்லங்களில் மழலை மொழி கேட்கட்டும்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close