மங்களப் பலன்களை அருளும் உறையூர் வெக்காளி

  கோமதி   | Last Modified : 27 Jul, 2018 10:10 am

uraiyur-vekkaali-who-gives-benefits-to-her-devotees

திருச்சி நகரின் மையப்பகுதியில் அமர்ந்து தேடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள் அன்னை வெக்காளி. இங்கு சுகாசனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு மங்களப் பலன்களை வாரி வழங்குகிறார் வெக்காளி. பார் ஏழும் புகழ் உறந்தைப் பதியின் வளம் பகர் வரிதாய், திருநிறைந்த உறையூரில், பராந்தக்  சோழன் ஆண்டு வந்த போது, பூ வணிகன் ஒருவன், அரசன் பால் ஆதரவு பெற எண்ணி, சாரமா முனிவரால் தாயுமான இறைவனுக்காக அமைக்கப்பட்ட நந்தவனத்தில், செவ்வந்தி மலர்களை திருடி, அரண்மனைக்கு கொடுத்து வந்தான்.

முனிவர் இது குறித்து மலைக்கோட்டை தாயுமானவரிடம் முறையிட, அடுத்த நிமிடமே, இறைவன் மேற்கு கிழக்கு முகமாக திரும்பினார். இதையடுத்து உறையூரில் மண்மாரி பொழிந்தது. அதிர்ச்சியடைந்த மக்கள் அகிலம் போற்றும் நாயகியிடம் சரணடைந்தனர். தாயுமானவரின் சினத்தை தனிக்க வெக்காளியம்மன் அங்கு எதிர்பட மண்மாரி தனிந்து மகாதேவன் சினமும் தீர்ந்தது. அனைத்து மக்களுக்கு இல்லம் அமையும் வரை வானமே கூரையாக, மழை, வெயில் பனி, குளிர் என அனைத்தையும் ஏற்று மக்களை காத்து அருள் பாலித்து வருகிறாள் வெக்காளியம்மன். மேல் விமானம் இல்லாத கருவறையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வெக்காளியை, ஆடல் கண்டருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளிதாருகன் பேருரங் கிழித்த பெண் என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். 

► சித்திரை வருடப்பிறப்பு சதசண்டி வேள்வி, பூச்சொரிதல் ஆகியவை இந்த ஆலயத்தின் விஷேச நாட்களாகும்.

► திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து செல்லும் வழியில் 6 கிலோ மீட்டர் தொலைவில்  அமைந்துள்ளள இந்த ஆலயம்.

► காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இடைவேளையின்றி திறந்திருக்கும்.

இந்தத் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு விற்கப்படும் பிரார்த்னை சீட்டு வாங்கி, தங்களின் வேண்டுகோளை எழுதி, ஆலயத்தில் உள்ள சூலங்களில் கட்டினால் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம். அதே போல இத்தலத்தில் உள்ள பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் சனிக்கிழமைகளில் 5 வகை பழங்களை கொண்டு நைவேத்யம் செய்து வழிபட்டால் வாழ்வில் வளம் பொங்கும். 

► newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.