நமக்கேற்ற லலிதாசகஸ்ர நாம பாராயணத்தை தெரிந்துக் கொள்வோம்

  கோமதி   | Last Modified : 30 Jul, 2018 03:10 am
let-s-get-to-know-our-lalithasakasra-recitation

ஜெகன்மாதா ஸ்ரீலலிதா அகில உலகங்களுக்கும் தாய். தூய மனதுடன் அவளை நாடி கேட்பவர்களுக்கு , கேட்ட வரம் தருபவள். அவளை வழிபட்டால் நம் கஷ்டங்களை தீர்ப்பதுடன், தேக ஆரோக்கியம், தோஷங்களிலிருந்து நிவாரணம், திருமணம், குழந்தை செல்வம் முதலியவைகளை கொடுப்பாள். மேலும்  பேய், பிசாசு, பில்லி, சூனியம் முதலிய தீமைகளிலிருந்து விடுதலை தருவாள். அன்னையை குளிர்விக்க ஒரு சுலபமான வழி உள்ளது. அது ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம்.

இதன் ஒவ்வொரு நாமாக்களுக்கும் சிறப்புமிக்க, பலன்களை தர வல்ல தாரக மந்திரங்களாகும். ஆனால் இன்றுள்ள அவசர காலக்கட்டத்தில், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணத்தை முழுமையாக சொல்ல முடியவில்லையே என்ற கவலை பலருக்கு இருக்கிறது. முழுமையாக ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்ய முடியாதவர்கள், தினசரி 108 முறை ,அவரவர் தேவைக்கு - வேண்டுதலுக்கு  உரிய நாமாவைத் தேர்ந்தெடுத்து பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.
 
நல்ல கணவனை அடைய
நாமா : ஓம் சுவாதீன வல்லபாயை நம:
பொருள் - ஓம் தன் வயப்பட்ட அன்புமிக்க நாயகனையுடையவளுக்கு நமஸ்காரம்.
 

இச்சா, க்ரியா, ஞானம் என  மூவகை சித்திகளைப் பெற
நாமா : ஓம் மகாசக்தியை நம
பொருள் - ஓம் பெரும் உற்சவமெனக் கொண்டாடும் வழிபாட்டிற் கிசைபவளுக்கு நமஸ்காரம்.
 
சகல சவுபாக்கியங்களும் பெற
நாமா : ஓம் பக்த சவுபாக்கிய தாயின்யை நம
பொருள் - பக்தர்களுக்கு சவுபாக்கியத்தை வழங்கும் தேவிக்கு நமஸ்காரம்.
 
அஷ்ட ஐஷ்வர்யங்ளையும் பெற
நாமா : ஓம் ஸ்ரீகர்யை நம
பொருள் - ஓம் செல்வத்தை தருபவளுக்கு நமஸ்காரம்.
 
நாம் விரும்பிய பொருள் கிடைக்க
நாமா : ஓம் புருஷார்த்தப்ரதாயை நம
பொருள் - ஓம் நான்குவித நலன்களை அருள்பவளுக்கு நமஸ்காரம். அறம், பொருள், வீடு, இன்பம் ஆகிய நான்கு வித செல்வங்களைக் கொடுப்பவள்.
 
எடுத்த காரியம் தடங்கலில்லாமல் நிறைவேற
நாமா : ஓம் விக்ந நாசின்யை நம
பொருள் - ஓம் இடையூறுகளை நீக்குபவளுக்கு நமஸ்காரம்.
 
தீராத வியாதிகள் தீரவும், வராமல் தடுக்கவும்
நாமா : ஓம் சர்வ வியாதிப்ரசமந்யை நம
பொருள் - ஓம் எல்லா நோய்களையும் அடக்குபவளுக்கு நமஸ்காரம்
 
மகிழ்ச்சி உண்டாக
நாமா : ஓம் தயாமூர்த்தியை நம
பொருள் - ஓம் தயை வடிவானவளுக்கு நமஸ்காரம்.
 
நிலம், வீடு, மனை வாங்க கட்ட, தோஷங்கள் விலகி, வீட்டில் சுகமும் ஆரோக்கியமும் நிலவ
நாமா : ஓம் சாம்ராஜ்ய தாயின்யை நம
 
எண்ணிய விருப்பங்கள் நிறைவேற
நாமா : ஓம் சர்வ லோக வசங்கர்யை நம
பொருள் - ஓம் உலகமனைத்தையும் தன்னுள் வசப்படுத்தி ஆள்பவளுக்கு நமஸ்காரம். இந்நாமாவைச் சொல்லி குங்கும அர்ச்சனை செய்து நெற்றியில் திலகமிட்டுக் கொள்ளுதல் சிறந்த பலனைத் தரும்.
 
வழக்குகள் சாதகமாக இருக்க
நாமா : ஓம் சாமரஸ்ய பராயணாயை நம
பொருள் - ஓம் சமஸத்தை நிலையாகக் கொண்டவளுக்கு நமஸ்காரம்
 
சுக பிரசவம் உண்டாக
நாமா : ஓம் பிராண தாத்தர்யை நம
பொருள் - ஓம் பிராண சக்தியை அளிப்பவளுக்கு நமஸ்காரம்.
 
அறுவகைச் செல்வங்கள் பெருக
நாமா : ஓம் தன தான்ய விவர்த்தின்யை நம
பொருள் - ஓம் செல்வத்தையும் தான்யத்தையும் பெருக்குபவளுக்கு நமஸ்காரம்.
 
தூய்மையான மனம் பெற
நாமா : ஓம் சுத்த மானசாயை நம
பொருள் - ஓம் தூய மனமுள்ளவளுக்கு நமஸ்காரம்.
 
தம்பதிகளிடையே அன்யோனியம் நிலவ
நாமா : ஓம் சிவ சிக்தியைக்ய ரூபிண்யை நம
பொருள் - ஓம் சிவனும் சக்தியும் ஒன்றெனக் காட்சி தருபவளுக்கு நமஸ்காரம்.

அன்னையின் மந்திரங்களை துதித்திட நம்மை விட்டு தீமைகள் நீங்கி நன்மைகள் நிறையும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close