அருந்ததி சொன்ன ஸ்ராத்தகால விதி... வாயடைத்த விசுவாமித்திரர்!

  கோமதி   | Last Modified : 29 Jul, 2018 07:21 am

spiritual-story-arundhati-s-law-of-fate

அரச  வம்சத்தை சேர்ந்த ராஜரிஷி விசுவாமித்திரர். தனது கடுமையான  தவத்தால் பிரம்ம ரிஷியாக உயர்ந்தவர்.அதுவும் சாதாரண பிரம்மரிஷி அல்ல ஆனானப்பட்ட வசிஷ்ட மாமுனிகள் வாயால் பிரம்மரிஷி பட்டத்தை பெற்றவர் . இந்தப் பட்டத்தை விசுவாமித்திரர் அவ்வளவு எளிதாக பெற்று விடவில்லை . தொடந்து பல கடுமையான தவங்களை மேற்கொண்ட பிறகே பிரம்மரிஷி ஆனார் விசுவாமித்திரர். இந்தப் பட்டம் பெறுவதற்கு முன்னர் வசிஷ்ட மாமுனிக்கும் விசுவாமித்திரருக்கும் அடிக்கடி மோதல்கள் வெடிக்கும்.

வசிஷ்டரிடமிருந்து காமதேனுவை பறிக்க முயன்ற காலம் முதல் நடந்த பல மோதல்கள் அரங்கேறியுள்ளது. தனது முன்னோரின் நீத்தார் நினைவு நிகழ்ச்சிக்கு சாப்பிட வருமாறு  விசுவாமித்திரரை அழைத்தார் வசிஷ்டர். “அழைப்பை ஏற்பதில் சிரமம் இல்லை. ஆனால் ஒரு நிபந்தனை . எனது உணவில் 1008 வகை காய்கறிகள் படைக்கப்பட வேண்டும்”என நிபந்தனை ஒன்றை விதித்தார் விசுவாமித்திரர்.

இந்த பதிலால் குழப்பமும் கவலையும் அடைந்தார் வசிஸ்டர். முதலில் 1008 வகையான காய்கறிகள் உண்டா? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களை சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா? அப்படியே சமைத்துப்போட்டாலும் அதைச் சாப்பிட யாரால் முடியும்? ஒருவேளை நம்மை விசுவாமித்திரர் அவமதிக்க முயற்சிக்கிறாரா? இப்படி பலப் பல கேள்விகள் வசிஷ்டர் மனதில் தோன்றியது .ஆனாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சரி 1008 காய்கறிதானே எனது மனைவியான அருந்ததியிடம் சொல்லி உணவுக்கு ஏற்பாடு செய்கிறேன்." என்றார் வசிஷ்டர்.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும், திருமணமான உடன் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கவேண்டும் என்பது ஐதீகம் .கற்பின் அடையாளமாக  விளங்கியவர் அருந்ததி. வசிஷ்டரும் அருந்ததியும் இணைபிரியாமல் இருப்பதுபோல நீங்கள் இருவரும் இணைபிரியாமல் வாழுங்கள் என்று  இன்றைக்கும் ஆன்மிகப் பெரியவர்கள் மணமக்களை வாழ்த்துவது மரபு .

விசுவாமித்திரரரை  சாப்பிட அழைத்த நாளும் வந்தது. சாப்பிட  வந்த  விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத் துவையல் இவைகளோடு, ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுமே இலையில்  இருந்தன.1008 காய்கறிகள் இல்லை.

கடும் சினமுற்ற விஸ்வாமித்திரர், " இதென்ன ஏமாற்று வேலை?  1008 வகை காய்கள் எங்கே?" என்று வசிஷ்டரிடம் ஆவேசப்பட்டார். அவரோ "நான் அருந்ததியிடம் 10008 காய்கறிகளுடன் தானே சமைக்க சொன்னேன். அவளையே இதைப் பற்றி கேளுங்கள் " என்றார் வசிஷ்டர்.

 வசிஷ்டர் - விசுவாமித்திரர்  இருவரது உரையாடலையும் கேட்ட கற்புக்கரசி அருந்ததி, தானே முன்வந்து ஒரு ஸ்லோகத்தை கூறிவிட்டு, "இதுதானே ஸ்ராத்தகால விதி, உங்களுக்கு தெரிந்திருக்குமே!" என்றாள்.*

 விஸ்வாமித்திரர் வாயடைத்துப்போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுப்போனார். அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம் என்ன?

 காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம்

பனஸம் ஷட் ஸதம்சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே

இதன் பொருள்  ஸ்ராத்தத் திதியன்று சமைக்கப்படும் சமையலில், பாகற்காய்கறி 100 காய்களுக்குச் சமம், பிரண்டைத் துவையல் 300 காய்களுக்குச் சமம், பலாப்பழம் 600 காய்களுக்குச் சமம் என்று பாடல் கூறுகிறது. ஆயிரம் காய்கள் ஆயிற்றா? மீதி இலையில் எண்ணிப்பாருங்கள், எட்டுகாய் கறிகள் வைத்திருக்கிறேன். ஆக மொத்தம் 1008! " என்றாள். சாஸ்த்திரப்படி விளக்கம் சொன்ன அருந்ததியின் ஸமயோசித புத்தியை பாராட்டி, விஸ்வாமித்திரரும் அவளை வாழ்த்தி விட்டு சென்றார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.