ஆன்மீக சிந்தனை - ஐந்து தலை பாம்பினை ஈசன் ஆபரணமாக கொண்ட ரகசியம்

  கோமதி   | Last Modified : 01 Aug, 2018 02:08 am
spiritual-thinking-the-secret-why-lord-shiva-is-having-five-headed-snake-as-an-ornament

சம்ஹார மூர்தியான சிவன் தனது தலை, கழுத்து, கைகளில் பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். உடலெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டு, இடுகாட்டில் உலவுபவராக வணங்கப்படுகிறார். உலகையே காக்கும்  ஈசன் பாம்புகளையும், சாம்பலையும்,புலித்தோலையும் ஏன் அணிந்துக் கொள்ள வேண்டும்?. நமது இந்து மத தர்மத்தில் ஆன்மீகத்தின் வாயிலாக உலகியல் தர்மங்கள் போதிக்கப்படுகிறது.  

மனிதனை இயக்கும் ஐம்புலன்களாவன கண், காது, மூக்கு, வாய், மெய். நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் இவை தீயவழிகளில் ஈடுபடும் போது, கொடிய நஞ்சினை கக்கும் நாகம் போல மாறி மனிதனை துன்பத்திற்கு ஆளாக்கி விடும். அப்படியில்லாமல் ஐம்புலன்களை அடக்கி நல்வழியில் அவைகளை செலுத்தி விட்டால் வாழ்விற்கு அழகூட்டும் ஆபரணமாக அவை மாறி விடும். இதை நமக்கு உணர்த்தவே சிவன் ஐந்து தலை நாகப்பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். பாம்பின் ஐந்து தலைகள் நமது  ஐம்புலனைக் குறிக்கும். இதை உணர்த்தும் விதமாக தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன நாகத்தை லிங்கத்தின் மீது ஆபரணமாக சாத்துவது வழக்கம்.  நாக லிங்கத்தை தரிசித்தால் நமது மனதில் எழும் தீய ஆசைகள் நீங்கி தெளிவு உண்டாகி அமைதி பெறும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close