எந்த திதியில் எந்த வேலை செய்யலாம் ?

  கோமதி   | Last Modified : 30 Jul, 2018 07:06 pm

what-kind-of-work-can-you-do-at-awhat-thithi

நாம் ஆரம்பிக்கும் வேலைகள் எதுவாக இருந்தாலும் அதை நல்ல நேரம் பார்த்து ஆரம்பிப்பது வழக்கம். அதே நேரம் எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதையும் ,அந்த திதிக்குரிய அதிதேவதை யார் என்பதையும் தெரிந்துக் கொண்டு செய்யும் போது கூடுதல் பலன்களைப் பெறலாம். 

பிரதமை் திதிக்கு அதிபதி அக்னி பகவான்.உலோகம், மரம் இவைகளில் சிற்ப வேலைகள், பாய் முடைதல்,போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும் நல்லது.

துதியை திதிக்கு அதிபதி துவஷ்டா தேவதை.விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், வீடு கட்டுதல் நல்லது.

திருதியை திதிக்கு அதிபதி பார்வதி.வீடு கட்டுதல், கிரஹ பிரவேசம்,பெண் பார்த்தல் போன்றதுக்கு உகந்த திதி ஆகும்.

சதுர்த்தி திதியின் அதிபதி விநாயகர். வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்ய ஏற்ற திதி.  சதுர்த்தி திதியில் நற்காரியம் செய்ய ஒரு மாதத்தில் அது பின்னமாகும், ஆனால் சங்கடகர சதுர்த்தியும் ,ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதியும் இதற்கு விதி விலக்கு.

 பஞ்சமி திதியின் அதிபதி சர்ப்பம். இத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம் என்பதால்,அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம்.
 

சஷ்டி திதியின் அதிபதி முருகன். வேலைக்கு சேர, பசுமாடு வாங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க, மருந்து தயாரிக்க நல்லது. 
சப்தமி திதியின் அதிபதி சூரியன்.வீடுகட்ட, உபநயனம், விவாஹம், தேவதா பிரதிஸ்டை, இடம் மாற்றம், முன்னோர் கர்மாக்களை செய்ய உகந்தது.

அஷ்டமி திதியின் அதிபதி சிவபெருமான்.யுத்தம், தான்யம், வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது.

நவமி திதியின் அதிபதி பாராசக்தி.பகைவரை சிறைபிடிக்க, பகைவரை அழிக்க உகந்தது.

தசமி திதியின் அதிபதி ஆதிசேஷன்.தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகுகேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி, மங்களகரமான காரியம் செய்ய உகந்தது இந்த திதி.

ஏகாதசி திதியின் அதிபதி தர்ம தேவதை.பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதியில்,விவாஹம், விவசாயம், ஆபரணம், வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம்.

துவாதசி திதியின் அதிபதி விஷ்ணு.சுபசெலவுகள், தர்ம காரியம், அனைத்தும் செய்யலாம். திருவோணம் இணையும் துவாதசி மட்டும் விதி விலக்கு.

திரயோதசி திதியின் அதிபதி மன்மதன்.அனைத்தும் செளபாக்கியமான மங்களகரமான காரியம், நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி செய்யலாம். நீண்ட கால திருமண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிகாரம் செய்ய உகந்த திதி ஆகும்.

சதுர்தசி திதியின் அதிபதி கலிபுருஷன்.பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை செல்ல உகந்தது.
 

வளர்பிறையில் நாராயணனை வணங்கி வர வேண்டும்.

தேய்பிறையில் சிவபெருமானை வணங்கி வரவேண்டும்.

வளர்பிறை எனும் சுக்கில பட்ஷத்தில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகாரியம் தவிர்க்க வேண்டும்.

அமாவாசைக்கு முதல் நாளில், நம் முன்னோர் மற்றும் இறந்தவர்களுக்குண்டான காரியம் மட்டும் செய்ய வேண்டும்.

பௌர்ணமியில் செய்ய கடவுள் வழிபாடு மட்டும் செய்யலாம். யாகம் , மங்களகரமான காரியம், விருத்தி தரும். மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்.
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.