ராகு தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டியது

  கோமதி   | Last Modified : 03 Aug, 2018 01:10 pm

the-ragu-dosham-people-have-to-do

ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு தோஷம் ஏற்படுமாயின் அவர்களுக்கு, மனதில் இறுக்கம், மின்சாரத்தினால் பாதிப்பு,எதிலும் ஆர்வம் இல்லாமை,மனதில் தீய எண்ணங்கள், துர்சொப்பனங்கள், சமூகத்தில் அவப்பெயர்,அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், அயல் நாட்டில் இருக்கும் போது தொல்லை ஏற்படுதல், தீயவழிகளில் பணத்தை இழத்தல், உடல் நலக்குறைவு,வீண் வழக்குப் பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம்.

ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விரத முறைகளை பின்பற்றினால் ராகுவின் இன்னல்களில் இருந்து விடுபடலாம்.

ராகு காலத்தில் விரதமிருந்து துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யலாம். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும், பைரவரையும் வணங்கி வர இன்னல்கள் குறையும்.சனிக்கிழமைகள் தோறும் உபவாச விரதம் இருந்து ,மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்தும் தோஷங்களினால் ஏற்படும் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, அடுப்பில் உபயோகப்படுத்தும் கரி, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பதும்,நல்ல பலனைக் கொடுக்கும்.

துர்க்கை அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வதும் நல்லது. பாம்பு புற்றுக்கு பாலூற்றுவது, முட்டை வைப்பது நம்மை தோஷத்தில் இருந்து காக்கும். 

ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பிஜ மந்திரத்தை 40 நாட்களில் 18000 தடவை சொல்வது ஆகச் சிறந்த பலனைக் கொடுக்கக் கூடியது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.