30 நாட்களுக்குள் இரண்டாவது சூரிய கிரகணம்: நன்மையா... தீமையா?

  கோமதி   | Last Modified : 10 Aug, 2018 01:52 pm

second-solar-eclipse-within-30-days-good-is-it-bad

இந்த வருடத்தில் இரண்டு சூரிய கிரகணம் குறிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 11ம் தேதி என இரண்டு முறை நிகழ்வதால் முக்கியதுவம் பெறுகிறது.  சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும்போது ஏற்படும் நிகழ்வே சூரிய கிரகணம். எப்போதும் சூரிய கிரகணமானது, அமாவாசை நாளில் ஏற்படுவது வழக்கம். கிரகண நேரத்தில், சூரியனின் முழுப்பகுதியோ அல்லது ஒரு பகுதியோ மறைந்து காணப்படும். விளம்பி வருடம் ஆடி மாதம் 26ம் தேதி, ஆகஸ்ட் 11ம் தேதியன்று சனிக்கிழமை ஆயில்யம் நட்சத்திரத்தில் பகல் 1.32 மணி முதல் மாலை 5 மணிவரை நிகழும் ராகு கிரஹஸ்த பகுதி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என சொல்லப்படுகிறது.

ஒரே மாதத்தில் இரண்டு கிரகணங்கள் அடுத்தடுத்து தோன்றுவதால் நிறைய மாற்றங்களை நாம் சந்திக்க நேரலாம் என ஜோதிட நிபுணர்கள் கருதுகிறார்கள். அரசியல் ரீதியாக நிறைய குழப்பங்கள் நேரிடலாம் என்றும், நிலநடுக்கம், கடும் மழை போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்

புண்ணிய நதிகளில் ஸ்தானம் செய்தும், வீட்டில் இருந்துக் கொண்டே தெய்வ நாமத்தை உச்சரித்து, கிரகணத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். கிரணகத்துக்கு பின்பு வீட்டை கழுவிவிட்டு நாமும் குளித்து முடித்து தானங்கள் வழங்கலாம். கோயில்களிலும்  முழுவதுமாக கழுவி விடப்பட்ட பிறகு, புண்ணிஹவாசனம் நடத்திய பின்தான், கோயில் நடை திறக்கப்படும். முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது மிகவும் சிறந்தது.

கிரகணத்தில் என்ன செய்யக்கூடாது:

சூரிய கிரகணத்தை நேரடியாக காணக்கூடாது. கிரகண காலத்தில் சமையல் செய்ய கூடாது,மிக முக்கியமாக அந்த நேரத்தில் எதுவும் சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக்கூடாது. 

கர்ப்பிணிகள் கவனம்:

கிரகணம் நிகழும்போது பொது மக்களை விட, கர்ப்பிணிகள் அதிகம் கவனமாக இருக்க வேண்டி வலியுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக சூரிய கிரகணத்தின் போது,கர்ப்பிணிகள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது அவர்களுக்கும், அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதுகாப்பு என்று சொல்லப்படுகிறது. கர்ப்பிணிகள் நகம் கிள்ளக் கூடாது, காய்கறிகள் வெட்டுவது போன்ற எந்த வேலையும் செய்யக்கூடாது என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவது வழக்கம். இந்த வழக்கங்களை அறிவியல் ரீதியாக ஒப்பிட்டு,வாதம் செய்யாமல் இயற்கையோடு இணைந்து பெரியோர் சொல் கேட்டு நடப்பதால் நமக்கு தீமை எதுவும் இல்லையே...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.