ஆன்மீக செய்தி – அமாவாசையின் போது தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம்

  கோமதி   | Last Modified : 11 Aug, 2018 01:46 pm
spiritual-news-pithruvaragam-to-be-dedicated-to-the-time-of-the-new-moon

அமாவாசை மற்றும் தர்ப்பண காலங்களில் பொதுவாக நாம் நம்முடைய மறைந்த பெற்றோருக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆனால் அவர்களுடன் சேர்த்து தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம் உள்ளது. தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். அவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்வது நமக்கும் நம்முடைய சந்ததியினருக்கும் நன்மை பயக்கும்.

1. பிதா - தகப்பனார்

2. பிதாமஹர் - பாட்டனார்

3. ப்ரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்

4. மாதா - தாயார்

5. பிதாமஹி - பாட்டி

6. ப்ரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்

7. மாதாமஹர் - தாயாருக்குத் தகப்பனார்

8. மாது: பிதாமஹர் - தாய்ப்பாட்டனாருக்குத் தகப்பனார்

9. மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்

10. மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)

11. மாது : பிதாமஹி - தாய்ப்பபாட்டனாருக்குத் தாயார்

12. மாது: ப்ரபிதாமஹி - தாய்ப்பாட்டனாருக்குப் பாட்டி

மேற்சொன்ன ,பொதுவாக இந்த  12 பேர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் அவருக்கு முன்னோர் ஒருவரை தர்ப்பணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்யப்படாத தர்ப்பணத்தை, கர்மம் அதாவது கடன் என்கிறது நமது இந்து மத சாஸ்திரம். மற்ற எந்த பாவங்களையும் தோஷம் என்கிறோம். ஆனால் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாத பாவத்தை மட்டும் நாம் பித்ரு கடன் என்று சொல்கிறோம். எனவே நமக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும், நம்மையும் நம்முடைய தலைமுறைகளையும் காக்கும் பித்ருக்களுக்கு உரிய மரியாதையையும் ,வழிபாட்டையும் செய்வது நமது கடமையாகும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close