ஆன்மீக செய்தி – சிவன் 50

  கோமதி   | Last Modified : 13 Aug, 2018 04:58 pm

spiritual-message-shiva-50

கயிலைநாதன் சிவ பெருமானைப் பற்றிய 50 சுவையான தகவல்கள்

1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை - திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

 2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம் - ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் - தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?- திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம் - திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம் - பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர் - திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் - திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது - துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது - கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன் - கோச்செங்கட்சோழன்.

12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன் - நடராஜர்(கூத்து என்றால் நடனம்)

13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம் - சிதம்பரம்

14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம் - காசி

15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம் - திருவண்ணாமலை

16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம் - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம் - மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்- சின்முத்திரை

19.  கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர் - சுந்தரர்

20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம் -  ஸ்ரீசைலம்(ஆந்திரா)

21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம் - ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம் - திருவண்ணாமலை

23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த  ஆழ்வார்-  திருமங்கையாழ்வார்

24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம் - பரணிதீபம் (அணையா தீபம்)

25.  அருணாசலம் என்பதன் பொருள் - அருணம்+ அசலம்- சிவந்த மலை

26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை - ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர் - பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு - 1997, டிசம்பர் 12

29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம் - திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

30.. கார்த்திகை நட்சத்திரம் -தெய்வங்களுக்கு உரியது - சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம் - 24 நிமிடங்கள் (ஒரு நாழிகை) 

32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர் - அனுமன்

33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது? -திருவாசகம்

34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்? - அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)   

35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள் - அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)

36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை? - 108

37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர் - காரைக்காலம்மையார்

38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர் - அப்பர்(திருநாவுக்கரசர்)

39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்- ஆணவம், முயலகன்

40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம் - குற்றாலம்

41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம் - சங்கார  தாண்டவம்

42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்? - வெள்ளியம்பலம்(மதுரை)

43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம் - பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

44. நடராஜருக்குரிய விரத நாட்கள் - திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம் - களி. 

46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன் - தாயுமானசுவாமி

47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம் - காளஹஸ்தி

48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர் - பிருங்கி

49. திருமூலர் எழுதிய திருமந்திரம் - திருமுறையாகும் பத்தாம் திருமுறை

50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம் - திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.