ஆன்மீக செய்தி – இது பெண்களுக்கானது

  கோமதி   | Last Modified : 14 Aug, 2018 10:36 am

spiritual-news-it-s-for-women

காலையில் கோலம் போடுவது என்பது வீட்டிற்கு லட்சுமிகரத்தை கொண்டு வரும். கோலம் போடுவது எவ்வளவு முக்கியமோ, கோலம் போடப்படும் திசையும் முக்கியம். கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடுவதை தவிர்க்க வேண்டும். அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

மஞ்சள் நூல் கயிற்றில் திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்வதே மங்களகரமானது. பெண்கள் நெற்றிக்கு குங்குமம் இடுவதிலும் சில நெறிமுறைகளை நமது சாஸ்திரம் வகுத்துள்ளது. குங்குமத்தை கிழக்கு திசையை நோக்கி இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது.திருமணம் ஆன பெண்கள் மெட்டியை ஒரே ஒரு விரலில் மட்டுமே அணிய வேண்டும். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சுமங்கலி பெண்கள் தலை குளிக்கும் பொழுது சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.ஆரோக்கிய ரீதியாகவும் மஞ்சள் சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அறிந்ததே.

பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.இதை பெண்களின் பாதுகாப்பு குறித்து நமது முன்னோர்கள் வகுத்த நியதி. முந்தானையை தொங்க விட்டு நடக்கும் போது,அந்நிய ஆடவர் கண்ணில் ஒரு பெண்ணின் உடல் அழகு படுவது ஆபத்தானது என்பதால் சொல்லப்பட்டது.எப்பொருள் யார் வாய் கேட்பினும் நல்லது தானே.

பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது என்பது நமது சாஸ்திர விதி என்பதால், பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது,பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும். பெருமாள் கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது.இதுவும் தாய் மற்றும் வயிற்றில் வளரும் சிசுவின் நலன் கருதி சொல்லப்பட்டதே. வெள்ளிக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் பாகற்காயை சமைக்க கூடாது. அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும் என்பது நம்பிக்கை. 

நமது மத சம்பிரதாயங்களும்,விதிமுறைகளும் நிறைய அர்த்தங்களை கொண்டுள்ளது. அவற்றை முறையாக தெரிந்துக் கொண்டு செய்வது நல்லது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.