அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைய வேண்டுமா?கருடபுராணம் சொல்வதை கேளுங்கள்

  கோமதி   | Last Modified : 14 Aug, 2018 11:03 am
to-achieve-good-world-after-our-death-these-are-the-ways-as-per-garuda-puranam

நமது இந்து மத புராணங்களில், கருட புராணத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. இதற்கு முக்கிய காரணம்,கருடபுராணத்தில் ஒருவரின் மரணதிற்கு பின்னான வாழ்வு, பாவ,புண்ணியதிற்கு தக்க கிடைக்கும் சொர்க்கம்,நரகம், புனர் ஜென்மம் முதலியவற்றைப் பற்றி அதில் குறிப்பிட்டிருக்கும் செய்திகள் தான். ஒரு மனிதனுக்கு தன்னுடைய வாழும் காலத்தை விட இறப்பிற்குப் பின் தன்னுடைய நிலை என்னவாகும் என்பது குறித்து எழும் கவலையும்,எதிர்பார்ப்பும் தான் கருட புராணத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்க காரணம்.
உடலை விட்டு நம் ஆன்மா பிரிந்தவுடன் என்ன நடக்கப்போகிறது என்பது நம் யாருக்கும் தெரியப்பாவதில்லை. இருக்கும் போது செய்யப்படும் சில தான தர்மங்களால் நம் ஆன்மாவிற்கு நல்ல பதவி கிடைக்கும் என்பது சர்வ நிச்சயம். கருடபுராணம் சொல்லும்  சில நன்மைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். 

அன்னதானம் செய்பவர்கள் தாங்கள்,விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்கள்.

கோ தானம் செய்பவர்கள், கோலோகத்தில் வாழ்வர்கள்.

பசுவானது கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு,நிச்சயம் வைகுண்ட வாசம் உண்டு.

குடை தானம் செய்தவர்கள், 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்கள்.

தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையணை என இதில் எதை தானம் செய்தாலும், சந்திர லோகத்து சுகங்களை அனுபவிப்பார்கள்.

வாழும் காலத்தில்,பிறருக்கு வஸ்திர தானம் கொடுத்தவர்கள், 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்கள்.

அவசர காலத்தில்,இரத்தம்,  கண், உடல் தானம் கொடுத்தவர்கள், அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்கள்.

ஆலயத்துக்கு யானையை  தானம் கொடுத்தவர்கள், ஐராவதம் கொண்ட இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்கள்.

குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவர்கள்,இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்கள்.

கோவிலுக்கு நந்தவனங்களை அளிப்பவர்கள், ஒரு மன்வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்கள்.

தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவர்கள், மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்கள்.

பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம்  உன்னதமாயிருப்பதோடு மீண்டும் அவர்களுக்கு பிறவி வாய்ப்பதில்லை.

ஒரு கன்னிகையை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவர்கள்,  14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்கள்.

பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர்கள்,  தபோ லோகத்தை அடைகிறார்கள்.

எவனொருவன்,புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்கிறானோ,அவன்  64 ஆண்டுகள் பரமபதத்திலிருப்பான்.

தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர்கள்,  10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்கள். பௌர்ணமியில் இறைவனுக்கு டோலோற்சவம் செய்பவர்கள், இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்கள்.

தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவர்கள், மறு பிறவியில் நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்கள்.

பசித்தவருக்கு  சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவர்கள்,  ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்கள்.

தாகத்தில் தவிப்பவர்களுக்கு, ஒரு சொம்பு நல்ல தண்ணீரை தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்

அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர்கள், 60000 ஆண்டுகள் பரமபதத்திலிருப்பார்கள்.

தவறாமல் விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர்கள், 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்கள்.

சுதர்சன ஹோமமும்,  தன்வந்திரி ஹோமமும் செய்பவர்கள், ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக, தீர்க்காயுளுடன் வாழ்வர்கள்.

ஷோடச மகாலெட்சுமி பூஜையை முறையோடு செய்பவர்களது குலம், பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவார்கள்.

இதைப் படிப்பவரும், கேட்பவரும் புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும்,  தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள்.  அவர்களின் பெற்றோரும் பிதுர்களும் முக்தி பெறுகின்றனர் என்கிறது கருட புராணம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close