‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’... நந்தனாருக்காக ஈசன் நிகழ்த்திய நாடகம்

  கோமதி   | Last Modified : 14 Aug, 2018 04:51 pm

slightly-move-pillai-drama-performed-for-nandanar

மனிதர்கள் , தங்கள்  சொந்த குழந்தைகள் , உறவுகள் இவற்றுக்குள் பாகுபாடு  பார்ப்பது உண்டு,ஆனால் அனைத்து உயிர்களுக்கும் அப்பனான அந்த ஈசனுக்கோ தன் குழந்தைகளிடம் எந்த பாகுபாடும் இல்லை. இதற்கு உதாரணம் தான் நந்தனாரின் கதை.

சிதம்பரம் அருகிலுள்ள  மேல ஆதனூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் நந்தனார். சிவ பக்தியிலோ அனைவரைக் காட்டிலும் மேன்மையானவர்.அதீத சிவபக்தரான நந்தனாருக்கு வெகு காலமாய் சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டுமென்று ஒரு தீராத ஆசை. ஆனால் அவருடைய  ஏழ்மையின் காரணமாக அவர் சிதம்பரம் செல்ல முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.ஒரு நாள் தன் ஊருக்கு அருகே இருக்கும் திருப்புன்கூர் சிவலோகநாதர் திருக்கோயிலுக்கு வந்தார்.அக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் திருக்கோயிலுனுள் சென்று வர அனுமதியில்லாததால்,திருக்கோயிலுக்கு வெளியே நின்று, சுவாமியை எட்டி எட்டிப் பார்த்தார். எவ்வளவு முயற்சித்தும் இறைவனை அவரால் பார்த்து வணங்க முடியவில்லை.

திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி யிருந்ததாலும், சுவாமியின் முன் நந்திதேவர் அமர்ந்திருந்ததாலும்,நந்தனாரின் பார்வைக்கு சுவாமி தெரியவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள் கூட்டம் சிறிது நேரத்தில் குறைய ஆரம்பித்தது.  அப்போதும் நந்தனாரின் பார்வைக்கு சுவாமி தெரியவில்லை. இப்போது நந்திபெருமானின் பின்புறம் மட்டும்தான் தெரிந்தது.மிக மனவருத்தத்துடன் "சிவனே!, உன் திருமுகத்தைக் காண முடியவில்லையே! என மனமுருகி வேண்டினார்.நந்தனாரின் இந்த நெக்குருகும் வேண்டுதல் பெருமானின் கர்ப்பகிருக வாயிலில் இருக்கும் துவார பாலகர்களின் கவனதிற்கு சென்றது.

உடனே இரு துவாரபாலகர்களும் நந்தனாரின் மன வேதனையை பெருமானிடம் சென்று, ஐயனே!“தங்கள் பக்தர் நந்தனார் வந்திருக்கிறார்” என்று சொன்னார்கள்.சிவபெருமானும் நந்தனாரின் பக்தி நினைவலையை எண்ணி ,தன் முன்பாக அமர்ந்திருந்த நந்தியை, சற்று இடப்பக்கமாக விலகியிரு, எனச் சொன்னார். எம்பெருமானின் உத்தரவுக்கு மறுபேச்சின்றி நந்தியாரும்  இடதுபுறமாக கொஞ்சம் நகர்ந்தமர்ந்தார். இப்போது சிவலோகநாதரின் திருமுக திருக்காட்சி நந்தனார்க்கு கிடைத்தது.எம்பெருமானின் திருக்காட்சியை கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார்.இந்த தருணத்தில் நம் எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி எழலாம். ஈசன் நேராக நந்தனாரை உள்ளே வரவழைத்திருக்கலாமே,அதை விடுத்து ஏன் நந்தி தேவரை விலகச் சொல்ல வேண்டும்?. இந்த சம்பவத்தினால்  தான் இறைவனின் பேரன்பு நமக்கு தெளிவாகிறது.அந்த பேரன்பு கலந்த உண்மை.நந்தி விலகியது நந்தனாரின் தூய சிவ பக்தியை உலகோருக்கு தெரிவிக்க இறைவன் நிகழ்த்திய அற்புதம்.

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.