குளித்து முடித்ததும் ஏன் முதலில் தலையை துவட்டக்கூடாது தெரியுமா?

  கோமதி   | Last Modified : 08 Sep, 2018 12:03 pm

when-the-bathing-is-finished-do-not-start-your-head-first-why-do-you-know

ஒருவரை நாம் திட்டும் போது, மூதேவியே என்கிறோம். எதிர்மறை சக்திக்கு உதாரணமாக மூதேவியை நாம் குறிப்பிட்டாலும், தென்னிந்தியாவில் ஒரு காலத்தில்,மூதேவி என்று அழைக்கப்படும் மூத்த தேவி வழிபாட்டுக்கு உரியவளாக இருந்திருக்கிறாள்.

பத்ம புராணத்தின் படி, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது, அதனிலிருந்து வெளிபட்ட ஆலகால விஷத்திலிருந்து பிறந்தவளே மூத்த தேவி என்றும் அதன்பிறகு வெளிபட்ட அமிர்தத்திலிருந்து பிறந்தவள் ஸ்ரீதேவியாகிய லக்ஷ்மி என்றும் தெரிகிறது. ஸ்ரீ தேவியாகிய லக்ஷ்மிக்கு முன் தோன்றியவள் என்பதால், இவள் மூத்த தேவி என்றழைக்கப்படுகிறாள். இதுதான் பின் நாளில் மூதேவி என்று மாறிவிட்டது என்கிறார்கள்.

அவளுடைய தோற்றத்தைப் பொறுத்த வரையில், ஆகம நூல்களின் படி மூத்த தேவி, அகோரமான மற்றும் அலட்சணமான தோற்றத்தை உடையவள் என்றும், காக்கை கொடியினை ஏந்தியவள் என்றும் கூறப்படுகின்றாள்.

ஜேஷ்டா தேவியின் வசிப்பிடம் 

எங்கெல்லாம் துர்வாடை, அழுக்குத்துணிகள், துன்பம், புலம்பல், அலங்கோலமாக ஆடுதல், எதிர்மறையான எண்ணங்கள், அடிக்கடி கொட்டாவி விடுதல், தீராத மனக்கஷ்டம், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், இருக்கிறதோ... இவை அனைத்துமே மூதேவிக்குப் பிடித்த இடங்களாகும். நமது வீட்டில் மூதேவி தங்காமல் இருப்பதற்கு, தீபம், உப்பு, மஞ்சள், கண்ணாடி, பட்டு ஆடைகள், தேங்காய், பால், வெண்ணெய், மாவிலை, கோமியம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

குளிக்கும்போதும் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள். குளிக்கும் போது, எடுத்தவுடன் தலைக்கு நீரை ஊற்றிக்கொள்ளக்கூடாது. முதலில் பாதத்தில் ஊற்றி பிறகு உடலில் விட்டுக்கொண்டு கடைசியாகத்தான் தலையில் நீரை விட்டுக்கொள்ள வேண்டும். குளித்து முடித்ததும், துடைத்துக்கொள்ளும்போது முதலில் தலையை துவட்டக்கூடாது. பின்பக்க முதுகைத்தான் துடைக்கவேண்டும்.

ஏனென்றால், நாம் தினமும் குளிக்கும்போது , நம் உடலில் வந்து அமர்வதற்கு மகாலக்ஷ்மியும் அவரது அக்கா மூதேவியும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு வாசலில் காத்துகொண்டு நிற்பார்களாம். நாம் குளித்து முடித்தவுடன் யார் முதலில் வந்து அமர்வது என்று அவர்களுக்குள் ஒரு போட்டி. முடிவில் அக்காதான் முதலில் சென்று உட்காரவேண்டும் என்கிற நியதிப்படி, நாம் குளித்து முடித்தவுடன், தலையை முதலில் துவட்டிக் கொண்டால், அங்கு மூதேவி வந்து அமர்வாள். அப்படி அவள் நம் தலையில் அமர்ந்தால், நம் புத்தி வேலை செய்யாது. ஆகவே, முதலில் முதுகை துடைக்கவேண்டும். அப்போது தான் மூதேவி முதுகில் அமர்வாள்.

அடுத்தது நம் முகத்தில் மகாலட்சுமி வந்து அமரும் போது, நாம் முகம் தெளிவாகவும், சென்ற இடமெல்லாம் நமக்கு அதிக வரவேற்பும் கிடைக்கும். முதலில் முகத்தை துடைத்துகொண்டால் மூதேவி வந்து அமர்ந்து நம்மை மற்றவர் வெறுப்புக்கு ஆளாக்கி விடும். இதை அன்றே நமது திருவள்ளுவரும், 

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளான் தாமரையி னாள்.

என்று பாடியுள்ளார்.

அதாவது, சோம்பேறியின் முகத்தில் மூதேவி தங்குவாள்; சோம்பல் இல்லாதவனிடம் ஸ்ரீதேவி தங்குவாள் என்றார். 

எனவே எப்போதும் தூய்மையான மனம் மற்றும் உடலுடன் இருக்கும் போது,அது இறைவன் உறையும் கோவிலாகிறது.

newstm.in

உங்கள் நட்சத்திரத்துக்கான குண நலன்களைத் தெரிந்துகொள்ள (பகுதி 1) கிளிக் செய்யுங்கள்...

உங்கள் நட்சத்திரத்துக்கான குண நலன்களைத் தெரிந்துகொள்ள (பகுதி 2) கிளிக் செய்யுங்கள்...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.