“வீடுகள்ல, மூணு எண்ணெய் எப்பவும் இருக்கணும்” - உடல் நலம் காத்திட ஒலித்த தெய்வத்தின் குரல்

  கோமதி   | Last Modified : 16 Aug, 2018 03:32 pm

a-house-should-always-have-these-three-types-of-oils-the-voice-of-kanchi-mahan

காஞ்சி காமகோடி மாமுனி , மகாப்பெரியவா பல கோடி மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய மகா ஜோதி . பெரும்பாலும் மனம் ஆத்மாவிற்கு அருளுரை கொடுத்த அந்த தெய்வத்தின் குரல் , நமது உடல் நலனுக்காகவும் ஒலித்திருக்கிறது.

பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு எழுந்தார் ஒரு பக்தர்! நடு முதுகுத்தண்டில் தாங்க முடியாத வலி!"நடு முதுகுல... பயங்கர வலி பெரியவா..! எல்லா  வகை...  வைத்தியமும் பாத்தாச்சு! ஒண்ணும் கேக்கல! பணம் கரைஞ்சது தான் மிச்சம்! வலி போகல!...பெரியவாதான் இத.. குணப்படுத்தணும்" என்றார்.அவர் முகத்தில் வேதனை தெரிந்தது.

உடனே பெரியவாள் ''முன்னெல்லாம்.....செக்குல ஆட்டின நல்லெண்ணெய் தேச்சு, கொஞ்சம் ஊற வச்சு, வெந்நீர்ல... சீக்காயோ, அரப்போ தேச்சு குளிப்பா!. இப்போ அவசர யுகம் ! எண்ணெய் தேச்சு குளிக்கவே டைம் இல்ல.! "சனி நீராடு"ன்னு... ஸ்கூல்ல படிக்கறதோட செரி. 

அத... follow பண்ணணுங்கறது மறந்து போச்சு.! அரப்பு, சீயக்கா பொடிக்கு பதிலா, தலைக்கு தேச்சுக்க என்னென்னமோ வந்திருக்காம்....! எல்லாம் கெமிக்கல்ஸ் சேந்தது.! பின்னால.... கெடுதின்னு தெரிஞ்சாலும், அதையேதான் வாங்கறா...! போகட்டும் போ! நீ இனிமே.... ரெகுலரா.... எண்ணெய் தேச்சுண்டு, வெந்நீர்ல குளி! மிளகு ரசம், பெரண்டை துவையல் பண்ணி சாப்டு..! என்ன?" என்றார்.

"கட்டாயம் பெரியவா சொன்னபடியே பண்றேன்" என்றார் அந்த பக்தர்.

மூணு மாதம் கழித்து வந்தார் முதுகுவலிக்காரர். வலி போய்விட்டதாம்.!

எண்ணெய் தேச்சு வெந்நீர்ல குளியல், மிளகு ரசம், பெரண்டை துவையல் இந்த மூன்றின் சேர்க்கை பற்றி யார் ஆராய்ச்சி பண்ணினால் என்ன, பெரியவா சொன்ன சிம்பிள் வைத்தியம் கை மேல் பலன் கொடுத்திருந்தது.

பெரியவா திருவாக்கிலிருந்து சில  ஹெல்த் டிப்ஸ்  

வீடுகள்ல, மூணு எண்ணெய் எப்பவும் இருக்கணும்......

1. நல்லெண்ணெய் - விளக்கேத்த, சமையல் பண்ண, எண்ணெய் தேச்சு குளிக்க;

2. விளக்கெண்ணெய் - வருடத்தில் ரெண்டு தரம், காலைல வெறும் வயித்துல குடிச்சா..... வயிறு செரியா இருக்கும். வயித்துவலி இருந்தா, கொஞ்சம் விளக்கெண்ணெய் எடுத்து தொப்புளை சுத்தி நன்னாத் தடவிண்டா செரியாப் போய்டும். சூடு தணியும். பாதத்ல வெடிப்பு-கிடிப்பு, புண்ணு இதெல்லாம் வராது.

3. வேப்பெண்ணெய் - வேப்பெண்ணையை தெனமும் கை,கால், முட்டிகள்ல தடவிண்டா, முட்டி வலி வரவே வராது. 

[பெரியவாளும் தினமும் கை, கால் முட்டியில், வேப்பெண்ணெய் தடவிக்கொண்டு குளிப்பாராம்]

தெனமும் குளிச்சதும், ரெண்டு காலையும், பாதத்தையும் நன்னாத் தொடச்சுக்கணும். நம்ம ஒடம்புல, காலுதான் முக்யமான பாகம். பாதத்தை நன்னா கவனிச்சுண்டா, ஒடம்பும் நன்னா இருக்கும். ராத்திரி படுத்துக்கறதுக்கு முன்னாடி, பாதத்தை நன்னா அலம்பிண்டு, ஈரம் போகத் தொடச்சிண்டு படுத்துக்கணும்." இப்படி கருணை காஞ்சி மாமுனி அத்ம பலத்துக்கு மட்டுமன்றி உடல் நலன் காக்கவும் நமக்கு அருளாசி புரிந்திருக்கிறார்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.