பெண் வடிவ தட்சிணாமூர்த்தி தரிசிக்க தில்லை செல்வோம்!

  கோமதி   | Last Modified : 17 Aug, 2018 05:59 pm

let-s-go-to-see-lady-shaped-dakshinamurthy

பக்தர்கள் வாழ்க்கையில் மங்கலம் தரும் வியாழக் குரு பகவான், கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை காளி கோவிலில் கடம்பவன தக்ஷணரூபிணி என்ற பெயரில் தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். பெண் தெய்வமாக குரு பகவான் காட்சியளிக்கும் தில்லை காளி கோயிலின் தல புராணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று .

இந்த உலகத்து ஜீவ ராசிகள் அத்தனையையும் காத்தருளும் எம்பெருமான் ஈசன் , உலகத்துக்கு  பல விசயங்களை உணர்த்தும் விதமாக திருவிளையாடல்களை நடத்தியுள்ளார். இதில் ஒரு திருவிளையாடல் சிவனுக்கும் அன்னை பராசக்தி இருவருக்கிடையில் தங்களில் யார் சக்தி மிக்கவர் என வாதம் ஏற்பட்டது. பார்வதிதேவி, நானே உயர்ந்தவள் என வாதிட்டாள். போட்டியில் வாதங்கள் கோபங்கள் வளர்ந்தது. நடனப் போட்டி நடந்தது . ஈசன் தந்திரமாக வென்றார் . ஈசனின் இந்த செயலால் கோபமடைந்த அன்னை  உக்கிர (கோபம்) காளியாக ஆகிவிட்டார் . தாயுள்ளம் கொண்ட தனக்கு கோபம் வரும்படி ஆகி விட்டதே என வருந்திய பார்வதி, சிவனிடம் விமோசனம் கேட்டாள்.அதற்கு சிவன், பார்வதி! நீ வருந்த வேண்டாம். உலக நன்மை கருதி நான் செய்த திருவிளையாடலே இது. அரக்கர்களால் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் துன்பம் ஏற்பட இருக்கிறது. நீ அவர்களை அழிக்க வேண்டும். பின், தில்லை(சிதம்பரம்) வந்து என்னை நோக்கி தவம் இரு. நான் அங்கு ஆனந்த நடனமாட, நடராஜர் என்ற பெயர் தாங்கி வருவேன். அப்போது சிவகாமி என்ற பெயருடன் என்னை வந்தடைவாய் என்றார்.

அன்னை தில்லைக் காளி என்ற பெயரில் சிதம்பரத்தில் அமர்ந்தாள். சிலர் எல்லைக்காளி என்றும் சொல்கிறார்கள் . தில்லை காளிக்கு பக்தர்கள் நல்லெண்ணெய் அபிஷேகம், வெள்ளை வஸ்திரம் அணிவித்தல், குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். ஞாயிறு (ராகு காலம்), பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.மகம் நட்சத்திரத்திற்கு இவள் அதிதேவதை என்பதால், மகத்தில் பிறந்தவர்கள், நினைத்தது நிறைவேற அன்னைக்கு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

பெண் வடிவ  தட்சிணாமூர்த்தி: தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் கடம்பவன தக்ஷணரூபிணி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். விரிந்த கூந்தலுடன் கல்லால மரத்தடியில் காட்சி தருகிறார். அருகில் சனகர், சனந்தனர், சனவாதனர், சனத்குமாரர் என்ற முனிவர்கள் வீற்றிருக்கின்றனர். கல்வியில் சிறப்பு பெற மாணவர்கள் வியாழனன்று நெய் தீபமேற்றி வழிபடுகின்றனர். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் உள்ள சரஸ்வதிக்கு வீணை வித்யாம்பிகை என்று பெயர். 

ஆன்மீகத் தலமான சிதம்பரம் சென்று நடராஜப் பெருமான் சிவகாமி அன்னை தரிசித்து பின்னர் தில்லை காளி திருக்கோயில் சென்று வர நமது பாவங்கள் தீர்ந்து வாழ்வில் அமைதியும் ஆணந்தமும் நிலவும் .

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.