வாழ்வும் வளமும் தரும் சாளக்கிராமகக் கற்கள்

  கோமதி   | Last Modified : 18 Aug, 2018 04:10 pm

a-precious-stone-that-gives-life-and-resources

கண்டகி புனித  நதியில் நீராடி முக்தி நாதன் எனப்படும் சாளக்கிராம மூர்த்தியை பக்தியுடன் வழிபடுபவர்கள், பூவுலகில் சுகமாக வாழ்ந்த பின்னர் வைகுண்டத்தில் வசிப்பார்கள் என்கிறது விஷ்ணு புராணம்.சாளக்கிராமம் உள்ள வீடு வைகுண்டத்திற்கு சமம் என்கிறது பத்மபுராணம். சாளக்கிராம அபிஷேக தீர்த்தம் கங்கா தீர்த்தத்தைவிட உயர்ந்தது என்று சொல்கிறது ஸ்ரீசாளக்கிராம தத்துவ முக்தாவளி எனும் நூல்.ஸ்ரீதேவி பாகவதமும், ஸ்ரீநரசிம்ம புராணமும் சாளக்கிராம வழிபாட்டினை புகழ்கின்றன. ஆன்மிக நம்பிக்கை , கடவுள் பக்தி கொண்ட அத்தனை பேருக்கும் சாளக்கிராமம் குறித்த பல தகவல்கள் தெரிவதில்லை . இந்த பதிவில் சாளக்கிராம கற்களின் சில அமைப்புகள் பற்றிய குறிப்புகளை  அறிந்து கொள்வோம்.

68 வகை சாளக்கிராம மூர்த்தம்

பலவித வண்ணங்களிலும், வடிவங்களிலும் உள்ள சாளக்கிராம கற்களில் பதிந்துள்ள உருவ அமைப்புக்கேற்ப, மகாவிஷ்ணுவின் பல அவதாரங்களை குறிக்கும் பெயர்கள் குறிப்பிடப்படும். உதாரணமாக, சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய குறிகள் உள்ள கற்கள் கேசவம் என்று சொல்லப்படும். இவ்வாறாக, கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், ஸ்ரீதரம், ரிஷிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்ஷனம், பிரத்யும்னம், நரசிம்மம், ஜனார்த்தனம், ஹரி, கிருஷ்ணம், சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராக மூர்த்தி, மத்ஸ்ய மூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகையான சாளக்கிராம மூர்த்தங்கள் உள்ளது என புராண  நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாளக்கிராம அம்சங்கள் :

முழுவதும் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியவை, நரசிம்ம அம்சம் உள்ளவையாக கருதப்படுகிறது. மோட்ச பிராப்தியை தரக்கூடியதாக இருப்பதால், இவற்றை பெரும்பாலும் வீடுகளில் வைத்து வழிபடுவது இல்லை.

சக்கர வடிவத்தில், கருப்பு வண்ணத்தில் இருக்கும் சாளக்கிராம கற்கள், ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை தரக்கூடியதாகும்.

முன் பக்கத்தில் பாம்பு போன்ற தோற்றத்துடன், தங்க நிற ரேகைகள் அமைந்த கற்கள், வாமதேவ அம்சமாகும். இவற்றை வழிபட்டால் பல நன்மைகள் வந்து சேரும்.

இடப்புறமாக பச்சை நிறம் பொருந்திய கற்கள், சகல பாவங்களையும் போக்கக் கூடியதாக கருதப்படுகிறது.

வட்ட வடிவத்தில் இருக்கும் சாளக்கிராம கற்களை, வீடுகளில் வைத்து வழிபடுபவர்களுக்கு செல்வ வளம் குறையாமல் இருக்கும்.

குடை போன்ற வடிவம் உடைய கல்லை வைத்து வணங்கி வருபவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.

சக்கர அமைப்பு அல்லது பாம்பு தலை போன்ற அடையாளங்களுடன் உள்ள சாளக்கிராம கற்களானது, பல்வேறு நிறங்களில் இருந்தால் அது லட்சுமி காந்தம் எனப்படும். அத்தகைய கற்களை வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.

நீல நிறமாக உள்ளவை ஸ்ரீகிருஷ்ண அம்சம் பொருந்தியவையாக இருப்பதால், அதை வணங்குபவர்கள் செல்வமும், சுகமும் அடைவார்கள்.
பச்சை நிறத்தில் இருக்கும் சாளக் கிராமமானது ஸ்ரீநாராயண அம்சத்துடன் இருப்பதோடு, வழிபடுவோருக்கு பலத்தை யும், தைரியத்தையும் வழங்கக்கூடியது.

வாசு தேவ அம்சம் கொண்டதாக இருக்கும் கற்கள் வெண்மையாக இருப்பதோடு, ஞானம், பக்தி மற்றும் மோட்சம் ஆகிய பேறுகளை தருவதாக ஐதீகம்.

கருப்பு நிறத்தில் உள்ளவை விஷ்ணுவின் அம்சமாக இருந்து பெயர், புகழ், பெருமை ஆகியவற்றை அளிக்கும்.
ஓம் நமோ நாராயண என நாம ஜெபம் செய்வோம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.