ஆன்மீக செய்தி - பெண்கள் மெட்டி அணிவதால் கிடைக்கக் கூடிய செல்வம்

  கோமதி   | Last Modified : 21 Aug, 2018 11:42 am

spiritual-news-women-s-wealth-by-wearing-metti

ஆயிரம் காலத்து பயிரான திருமணத்தில் பல்வேறு சடங்குகளும் சம்பிரதாயங்களும் உள்ளன. அவை அனைத்தும் பெயருக்கு சடங்குகளாக தோன்றினாலும், அறிவியல் மற்றும் உளவியல் ரீதியாக நமக்கு போதனைகளை தருவதாகும்.திருமண சடங்குகளில் மிகவும் முக்கியமானது, மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவித்தல். நம்முடைய இந்திய கலாச்சாரத்தின்படி திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது மரபு.

பழங்கால வழக்கத்தில், திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் தான் அடையாள அணிகலன்களாக இருந்தது.இதற்குப் பின்னாலும் ஒரு அறிவார்ந்த காரணம் பொதிந்து இருந்தது. பெண்ணானவள் எப்போதும் நிலத்தைப் பார்த்து நடக்க பழக்கப்பட்டதால்,தனக்கு எதிரே வரும் ஆணின் காலைப் பார்த்து அவன் திருமணம் ஆனவனா இல்லையா என்பதை தெரிந்துக் கொள்ள அவன் காலில் அணிந்திருந்த மெட்டி உதவியாக இருந்தது. அதே போல் நெஞ்சை நிமிர்த்தி நடந்து வரும் ஆண்,எதிரே வரும் பெண்ணின் கழுத்தில் தென்படும் திருமாங்கல்யத்தை வைத்து அவள் திருமணமானவள் என்பதை தெரிந்துக் கொள்கிறான்.காலப்போக்கில் மெட்டி என்பது பெண்ணின் ஆபரணப் பட்டியலில் சேர்ந்து விட்டது.

திருமணம் முடிந்ததும் சிறிது காலத்தில்,தம்பதியினரிடம் எல்லோரும் கேட்பது,எதிர்பார்ப்பது மழலை செல்வத்தை. அதற்கு ஒரு பெண்ணை தயார் செய்யவும் மெட்டி பெரும் பங்கு வகிக்கிறது. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தீர்வு கிடைப்பதோடு,அவை சீரான முறையில் செயல்படும் காரணமாக அமைகிறது.பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்பதால் திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் ஏற்படும் சிக்கல்கள் தீர்க்கப்படுகிறது.மேலும் பெண்களின் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில்தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிவதால்,மெட்டி அணிந்து நடக்கும் போது நரம்புநுனி அழுத்தப்படுவதாலும்  கருப்பை வளர்ச்சிக்கு உதவுகின்றது.

ஆகவே பெண்கள் மெட்டியை அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது. இதனால், காலத்தே நல்ல மக்கட்பேற்றோடு தம்பதியினர் சீரும் சிறப்புமாக வாழலாம்.அர்த்தமுள்ள இந்துமதம் அர்த்தமுள்ள பல சடங்குகளில் நமது நல்வாழ்வை உறுதி செய்கிறது. கடமைக்கு என்று கருதாமல் சடங்குகளின் காரண காரியங்களை அறிந்து கொண்டு கடைபிடிப்போம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.