வரலக்ஷ்மி விரதம் - அஷ்ட ஐஷ்வர்யங்களையும் அள்ளித் தரும் அஷ்ட லட்சுமிகள்

  கோமதி   | Last Modified : 23 Aug, 2018 05:21 pm

varalakshmi-fasting-ashta-lakshmis-who-are-the-best-of-ashta-aishwarya

எல்லா செல்வங்களும் நிறைந்து இருக்கும் வீட்டை, லட்சுமி கடாக்‌ஷம் நிறைந்தது என்று சொல்வார்கள். செல்வங்களை வாரி வழங்கும் தெய்வமான மகாலட்சுமி மகாவிஷ்ணுவின் பத்தினியாவாள். முறையாக தன்னை வணங்குபவர்களுக்கு அஷ்ட ஐஷ்வர்யங்களை அள்ளித் தருபவள். எட்டுவித  செல்வத்திற்கும் அதிபதியாய்  எட்டு வித தோற்றங்களில் அருள்பாலிக்கும் மகாலட்சுமியை  அஷ்டலட்சுமி என வழிபடுகிறோம். செல்வம் செழிக்கவும்,திருமகளின் அருள் வேண்டியும் வழிபடும் வரல‌ஷ்மி விரத தினத்தில், அஷ்ட லட்சுமிகளின் சிறப்புகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். 

1. கஜலட்சுமி :

வாழ்க்கையில் சிறந்த பதவி பட்டம் பெற விரும்புபவர்கள் இவளை சரணடையலாம். நாட்டையே  ஆளும் வல்லமையை அளிப்பவள் கஜலட்சுமி.

2. ஆதி லட்சுமி :

ஆதிலட்சுமியானவள் மகாவிஷ்ணுவின் இடப்பாகத்திலிருந்து தோன்றியவர் என்று சொல்லப்படுகிறது. உலகம் இயங்க இவள் தயவு அவசியம் தேவை என்பதால், எந்தக் காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் ஆதிலட்சுமியை வணங்கி தொடங்கினால் அது நிச்சயம் முழு வெற்றியை அளிக்கும் என்பது நம்பிக்கை. 

3. சந்தானலட்சுமி :

வாழ்க்கையில் எத்தனை வகையான செல்வங்கள் இருந்தாலும் அவை அத்தனையையும் நிறைவு செய்வது நன்மக்கட் செல்வமே.அத்தகைய சந்தான செல்வத்தை அருளுபவளே சந்தான லட்சுமி. 

4. தனலட்சுமி :

வாழ்க்கையை மேம்பட வாழ, பொருட்செல்வம் இன்றியமையாததாக இருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது சான்றோர் வாக்கு. நேர்மையாக அத்தகைய பொருட் செல்வத்தை பெற தனலட்சுமியை துதித்து வழிபட வேண்டும்.

5. தானிய லட்சுமி :

வாழும் காலம் முழுமைக்கும் குறைவற்ற அன்னத்தைப் பெற இந்த அன்னையின் அருள் வேண்டும். தானங்களில் சிறந்த அன்ன தானத்தை மேற்கொள்ளவும், பிறரின் பசிப்பிணியைப் போக்கவும் ஆதரமாக விளங்கும் தானியம் வாழ்க்கையில் குறைவராமல் கிடைக்க தானியலட்சுமியை வழிபட வேண்டும்.

6. விஜயலட்சுமி :

வாழ்க்கையில் மனிதனுடைய வெற்றிக்கு துணை நிற்பவள் விஜயலட்சுமி. செய்யும் செயலில் தோல்வியே ஏற்படாமல்,எடுத்த காரியம் யாவிலும்  வெற்றி பெற, விஜயலட்சுமியை துதித்து வழிபட்ட பின்னர் எந்த முயற்சியையும் தொடங்கலாம்.  

7. வீரலட்சுமி :

ஒரு மனிதன் எப்படிப்பட்ட சூழலிலும்,எந்த நிலையில் இருந்தாலும் மன உறுதியையும், துணிச்சலையும்,வீரத்தையும் இழக்க கூடாது. வீரலட்சுமியை அன்றாடம் தவறாது வழிபட துணிச்சலும், வீரமும் அன்னையின் அருளால் நமக்கு கிட்டும்.

8. மகாலட்சுமி :

மேலே சொன்ன அத்தனை செல்வங்களுக்கும் அதிபதி இந்த மகாலட்சுமி. இந்த அன்னையை வழிபட எல்லா செல்வங்களும், ஆற்றல்களும் ஒன்று சேர்ந்து நமக்கு கிடைக்கும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.