பாரம்பரியம் சொல்லும் ஓணம் சத்யா விருந்து

  கோமதி   | Last Modified : 24 Aug, 2018 05:13 pm

onam-sathya-feast-of-tradition

கடவுளின் தேசமான கேரளத்தின் மிக முக்கியமான பண்டிகை ஓணம். நமது பண்டிகைகள் , திருவிழாக்கள் அனைத்தும் அன்பை உறவை பரிமாறிக் கொள்ளும் பாரம்பரிய தொடர்ச்சியே.திருவோண நாள் அன்று கேரளா மக்களால் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் அன்போடு ஓணம் சத்ய விருந்து, கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகளான அவியல், தோரன்,காலன், ஓலன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, மாங்காய், எலிசேரி, கூட்டுக்கறி ஆகியவை தலைவாழை இலைபோட்டு பரிமாறப்படும். பின்னர் பூவன்பழம், சர்க்கரை, உப்பேரி, காவற்றல், விளம்பி, சாதத்தில் பருப்போடு நெய் சேர்த்து பப்படம்(அப்பளம்) வைத்து உண்ணுவார்கள்.பின்னர் சாம்பார் சேர்த்து உண்ட பின்,  பிரதமன் எனப்படும் பாயசத்தை சுவைத்துவிட்டு, புளுசேரி கூட்டி, இறுதியாக மோர் கூட்டான் சேர்த்து உண்டு எழுந்தால் முழுமையான ஓணம் சத்ய விருந்து நிறைவு பெறும்.

ஓணம் கொண்டாட்டங்கள் வெறும் சதய விருந்தோடு முடிவு பெறுமா ? என்ன அன்றைய  மாலைப் பொழுதுகளில் பெண்கள் ஓணம் சேலை கட்டிக்கொண்டு, கோலத்தை சுற்றி கும்மி கொட்டியும், வீட்டு வாசலில் ஊஞ்சல் கட்டியும், பந்துகள் விளையாடியும் மகிழ்ச்சியுடன் ஓணத்தை கொண்டாடி மகிழ்வர். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை அறிந்த மகாபலி மன்னனும் அவர்களுக்கு ஆசிகளை வழங்கிவிட்டு, மீண்டும் பாதாள லோகம் செல்கின்றார் என்பது ஐதீகம்

கேரளம் காப்போம் என்ற பிரார்த்தனைகள் ஒலிக்க ஓணம் கொண்டாடுவோம். மகாபலி மன்னன் கேரள மக்களை ஆசிர்வதிக்கட்டும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.