இவர் நம் வீட்டில் இருந்தால், கண் திருஷ்டியே வராது

  கோமதி   | Last Modified : 28 Aug, 2018 12:52 pm

if-he-is-in-our-house-evils-will-not-come

எல்லோருடைய கண் பார்வையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு அடுத்தவர்களின் புகழ், பணம் மற்றும் வாழ்க்கை மீது ஒரு கண். சிலருக்கு அடுத்தவர்கள் அழகின் மீது ஒரு கண். ஆக இப்படி அடுத்தவர்களின் கண் திருஷ்டியால் நமக்கு எந்த வகையிலாவது துன்பங்கள் நேராமல் இருக்க வீட்டில் சில பொருட்களை வைப்பது உண்டு. அதில் ஒன்று தான் ‘கண் திருஷ்டி கணபதி’ 

அகஸ்திய மகாமுனிவரால் ,இந்த உலகையும், உலக மக்களையும் பாதுகாக்க தோற்றுவிக்கப்பட்ட, சர்வவல்லமை பொருந்திய மகாசக்தியே கண் திருஷ்டி கணபதி.சர்வ மகாசக்தி கணபதியான இவர் விநாயக பெருமானின் முப்பத்து மூன்றாவது மூர்த்தமாக உதயமானவர். ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாக கையில் சங்கு சக்கரமும், ருத்ர மூர்த்தியின் அம்சமாக மூன்று கண்களும்,பராசக்தியின் அம்சமாக சூலமும் தாங்கி காட்சி தருகிறார். நாகங்கள் இவரின் மேனியில் ஆபரணமாக விளங்க,தலையை சுற்றி அக்னிப் பிழம்பும்,51 கண்களையும் கொண்டுள்ளார்.மேலும் அனைத்து தெய்வங்களின் ஆயுதங்களை தாங்கியவாறு,சிம்ம வாகனத்துடன்,காலுக்கருகே மூஞ்சுருவினை கொண்டு போர்கோலத்தில் காட்சி தரும் இவரின் படத்தை வீட்டில் குறிப்பாக வடக்குத்திசை நோக்கி இருக்குமாறு மாட்டி வணங்கலாம். பூஜை அறையில் வைத்தும் வணங்கலாம். வீட்டின் முன் அறையில் மற்றவர்கள் கண் பார்வை படுமாறு வைத்தும் வணங்கலாம்.

வியாபாரஸ்தலம், அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளிலும் வைத்து வழிபடலாம். புதன்கிழமை இவருக்கு உகந்த நாள் என்பதால்,அன்று இவருக்கு உரிய மந்திரங்கள் சொல்லி வழிபட்டால், கண் திருஷ்டியில் இருந்து காத்துக் கொள்ளலாம். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.