ஏன் தெரியுமா? - புது வீட்டு கிரகப்பிரவேசத்தின் போது பசுவுக்கு முதல் மரியாதை

  கோமதி   | Last Modified : 28 Aug, 2018 03:31 pm
do-you-know-why-first-respect-for-cow-during-the-new-home-swarming-function

சொந்த வீட்டு கனவு இல்லாத நபர்களே இருக்க முடியாது. எல்லோருமே, தங்களுக்கான கனவு இல்லத்தில் குடி போகும் போது,எந்த ஒரு பிரச்சனையும்,தோஷமும் இருக்க கூடாது என்று தான் விரும்புவார்கள். ஆனால் நாம்  வீடு கட்டும் இடத்தில் நமக்கே தெரியாமல், சில குறைபாடுகள் இருக்கலாம். சில உயிரினங்கள் இறந்திருந்து,அதனால் அந்த மனைக்கு தோஷம் ஏற்பட்டிருக்கலாம். அவைகளை நீக்கவும்,நிவர்த்தி செய்யவும்,பல வகையான தெய்வங்களைக் குறித்து வேள்வி நடத்த வேண்டி வரும்.  அத்தனையும் செய்ய எல்லோராலும் இயலாது.

நம்முடைய சாஸ்திரப்படி, பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக ஐதீகம்.அதனால் தான் கிரகப்பிரவேசத்தின் போது, கோபூஜை செய்து விட்டால், எல்லா தெய்வங்களும்  திருப்தியாவதுடன், குறைபாடுகளும் நீங்கி புதிய இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் பெருகும். அதனால் தான் புது வீட்டு கிரகப்பிரவேசத்தின் போது பசுவுக்கும்  கன்றுக்கும் மரியாதை செய்கிறார்கள். இதனால் புதிய வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close