நவக்கிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகள் நீக்கும் நவபாஷாணம்

  கோமதி   | Last Modified : 03 Sep, 2018 03:50 pm
navapashana-is-the-removal-of-damages-caused-by-the-navagrahas

நவம் என்ற சொல்லுக்கு எப்போதுமே ஒரு தனி சிறப்பு உண்டு. நவகிரகங்கள்,நவ சக்தி, நவரத்தினம், நவபாஷாணம் என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் நவபாஷாணம் பற்றி நாம் அறியாத பல செய்திகள் உண்டு. நவம் என்பது ஒன்பதைக் குறிக்கும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதே நவ பாஷாணம். 

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றுக்கும்  ஒவ்வொரு கிரகத்தின் சுபாவம் உண்டு. நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கை என்பதால், நவபாஷாணங்களால் உருவான கடவுள் சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். 

தனித்தனி வேதியல்,இயற்பியல் பண்புகளைக் கொண்ட ஒன்பது வகையான பாஷாணங்களை சித்தர்களின் முறைப்படி, அதன் அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் உள்ள நீலி என்றொரு வகை,மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும். ஒன்பது பஷாணங்கள் என்னவென்று தெரிந்துக் கொள்வோம்.

1.சாதிலிங்கம்.

2.மனோசிலை

3.காந்தம்

4.காரம்

5.கந்தகம்

6.பூரம்

7.வெள்ளை பாஷாணம்

8.கௌரி பாஷாணம்

9.தொட்டி பாஷாணம்

இந்த நவபாஷாண கட்டு சாமானியர்களுக்கு கை வர இயலாது. சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும். பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில்,தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் என தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. 

நவபாஷாண தெய்வ சிலை என்றவுடன் நம் அனைவரின் மனதிலும் நிறைவது பழனிமலை தண்டாயுதபாணி தான்.இவரை வழிபடுபவர்கள் நவக்கிரகங்கள் அனைவரையும் ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.போகர் உருவாக்கிய பழனிமலை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்த நீரைபருகினால் அனைத்து நோய்களும் நீங்கப் பெறலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close