பணப்பெட்டி இருக்கும் பீரோவை இந்த திசையில் வைத்துப் பாருங்கள்.

  கோமதி   | Last Modified : 04 Sep, 2018 12:17 pm

place-the-money-box-and-bero-in-this-direction

இன்றைய நம்முடைய உலகம் பணத்தை சுற்றியே சுழன்றுக் கொண்டிருக்கிறது என்றால் அது நூறு சதவிகிதம் உண்மையே. இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கு மயங்காதவர்களே இல்லை எனலாம். ஆனால் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் நிற்பது இல்லை என்பதே பெரும்பாலானவர்களின் புலம்பலாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணம் வரும் வழி குறுகலாக இருந்தாலும்,செல்லும் வழி விசாலமாக இருக்கிறது என்பதே பலருடைய குறை. இதற்கு வாஸ்து ரீதியாக சில வழிகளை முயற்சி செய்துப் பார்க்கலாம். 

திருமகள் அருளால்,வீட்டில் எப்போதும் பண வரவு நிலைத்திருக்க திருமகளின் செல்வத்தைப் பராமரிக்கும் குபேரனின் படத்தை மகாலட்சுமியின் படத்தையும் சேர்த்தே வணங்க வேண்டும்.திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வோர், கிரி வல பாதையில் இருக்கும் குபேரலிங்கத்தை மறக்காமல் வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.குபேரனுக்கு பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும்.

இப்போது பணப்பெட்டி மற்றும் பீரோ வைக்கும் முறைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். 

வீட்டின் வடமேற்கில் பீரோ அல்லது  பணப்பெட்டி இருந்தால், பணம் வருவதும், போவதுமாக தான் இருக்குமே தவிர சேமிக்க முடியாததுடன் கடன்காரனாகவும் மாற்றி துன்பப்பட வைக்கும்.

தென்கிழக்கில் பணப்பெட்டி இருந்தால், விரயச் செலவுகள் அதிகரிப்பதுடன்,கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்காது. 

கிழக்கில் பீரோ இருந்தால், பணம் பல வழிகளில் வந்தாலும், வைத்தியதிற்கே பெரும்பகுதி செலவாகும். வீண் செலவுகளை ஏற்படுத்தும். 

தெற்குப் பார்த்த வீடாக இருப்பின், வடக்குச் சுவர் ஓரமாக, தெற்குப் பார்த்து பீரோ வைத்திருப்பவர்கள் வீட்டில், பெண்களுக்கான  வைத்திய செலவை அதிகப்படுத்தும்.

மேற்குப் பார்த்த வீடாக இருப்பின், கிழக்குச் சுவர் சார்ந்து, மேற்குப் பார்த்து பீரோ இருக்குமேயானால்,ஆண்களுக்கு நோய்க்கான செலவுகள் அதிகரிக்கும்.

கிழக்குப் பார்த்து பீரோவை வைத்தால், மகிழ்ச்சியான செலவுகளைத் தந்து, நிம்மதியையும் லாபத்தையும் தரும். கண்டிப்பாக செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். மங்கள காரியங்கள் மனையில் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.

குறிப்பாக வீட்டின், குபேர மூலை என்று சொல்லப்படும் தென்மேற்குச் சார்ந்த மூலையில் பீரோவை வைத்தால், பணம் கண்டிப்பாக எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.