விநாயக சதுர்த்தி - விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதன் பின்னணி

  கோமதி   | Last Modified : 13 Sep, 2018 01:40 pm
vinayagam-chaturthi-the-background-of-dissolving-vinayaka-idols-on-the-river

எந்த அளவிற்கு விநாயக சதுர்தியை நாம் கோலாகலமாக கொண்டாடுகிறோமோ, அதே அளவிற்கு கணபதியை ஆற்றில் கரைக்கும் வைபவமும் நடக்கும். வேறு எந்த பண்டிகைக்கும் இல்லாத சிறப்பு இது. ஏன் விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் விநாயகரை ஆற்றில் கரைக்கிறோம். இதன் தாத்பரியம் என்ன?. நம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதாவது செய்வார்களா?. இதன் பின்னணியிலும் வலுவான ஒரு காரணம் இருக்கிறது.  

ஆடி மாதம் ஏற்படும் புது வெள்ளப்பெருக்கு ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் விடும். அதனால் அங்கே நீர், நிலத்தில் இறங்காமல் ஓடிக் கடலை அடைந்து வீணாகும். ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் இறங்கும். அதனால் தான் ஆடி முடிந்து வரும் ஆவணியில் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள்.

ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்துவிடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும். ஏடெடுத்துப் படித்த அறிவை விட, அன்றாட வாழ்வின் நெளிவு சுளிவுகளை தெரிந்துக் கொண்டு அதற்கு தக்கபடி நடைமுறைகளை வகுத்துக் கொண்ட நம் முன்னொர்கள் போற்றத்தக்கவர்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close