ஆன்மீக கதை - கர்ண கவச ரகசியம்

  கோமதி   | Last Modified : 11 Sep, 2018 04:56 pm
spiritual-story-the-secret-of-the-karna-armor

சஹஸ்ர கவசன் என்ற அசுரன் தேவர்களை நிர்தாட்சண்யமின்றி கொடுமைப் படுத்தி வந்தான். அவனுடைய ஆணவத்திற்கு காரணம் பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது.எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. 

அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும். இவ்விதமாக 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான்.

இத்தகைய செயலை செய்ய எவராலும் இயலாத காரணத்தினால்,நாளுக்கு நாள் அவனுடைய அக்கிரமங்கள் அதிகரித்து, தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர். வழக்கம் போல்,அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழித்து உதவுமாறு வேண்டினர்.தேவர்கள் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணுவும் அசுரனின் கொடுமையை ஒழித்து தேவர்களைக் காக்க நர நாராயணர்களாக அவதரித்தார்.

ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர். நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை அறுத்து எறிந்தனர்.இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது. எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான்.

இந்த சஹஸ்ர கவசன் தான் அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள பூர்வ ஜன்ம கவசமான ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான்.இதற்காக தான் பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர்.

12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். மீதமிருந்த ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீங்கியதால்தான் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close