உங்களுடைய பிறந்த நட்சத்திர ஸ்தலம் எது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்

  கோமதி   | Last Modified : 14 Sep, 2018 01:22 pm

find-out-what-your-birth-star-temple

நல்ல நாள் கிழமைகள், பிறந்த நாள் பொழுதில், அவரவர் ராசி, நட்சத்திரங்களுக்கு அர்ச்சனை செய்துக் கொள்வது வழக்கம். ஆனால் நம்மில் பல பேருக்கு நம்முடைய நட்சத்திரத்திற்கு எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று தெரியாது.  வருடத்திற்கு ஒருமுறையாவது நம்முடைய பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு,நட்சத்திர நாளன்று சென்று வருவது எல்லா வகையிலும் நன்மையை தரும். சரி இப்போது நட்சத்திரங்களும் அதற்குரிய முக்கிய  ஸ்தலங்களைப் பற்றியும் தெரிந்துக் கொள்வோம். 

அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் கூத்தனூர்.

மற்ற தலங்கள் - ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி,

கொல்லிமலை.

பரணி  நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் - நல்லாடை

மற்ற தலங்கள் - திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம்.

கார்த்திகை  நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் - கஞ்சானகரம். மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர்.

ரோஹிணி நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் திருக்கண்ணமங்கை. மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை,கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர்,நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம், திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி.

மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் எண்கண். மற்ற தலங்கள் - அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை.

திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் சேங்காலிபுரம். மற்ற தலங்கள் - சிதம்பரம், அதிராம்பட்டினம்.

புனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் சீர்காழி. மற்ற தலங்கள் - பழைய வாணியம்பாடி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்.

பூசம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம்  திருச்சேறை. மற்ற தலங்கள் - விளங்குளம், ஒழுந்தியாபட்டு, ஆவூர், கோனேரிராஜபுரம், பரிதிநியமம், திருச்சுழி, அழகர் கோயில்.

ஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம்  திருப்புறம்பியம். மற்ற தலங்கள் - திருந்துதேவன்குடி, நண்டான் கோயில், சங்கரன்கோயில், திருப்புனவாசல், புள்ளபூதக்குடி, திருவிடந்தை.

மகம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் திருவெண்காடு. மற்ற தலங்கள் - திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர், ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு.

பூரம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் தலைசங்காடு. மற்ற தலங்கள் - நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம்,

உத்திரம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம்  கரவீரம். மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவக்கரை, செய்யூர்,கூவத்தூர், மயிலாடுதுறை, இடையாற்றுமங்கலம்.

ஹஸ்தம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் கோமல். மற்ற தலங்கள் - தர்மபுரி, செய்யாறு, புவனகிரி, ஏமப்பூர் ,எழிலூர், திருவாதவூர், திருவேற்காடு.

சித்திரை நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் திருவையாறு. மற்ற தலங்கள் - அண்ணன்கோயில், தாடிக்கொம்பு,திருநாரயணபுரம், நாச்சியார் கோயில், திருவல்லம், திருவக்கரை,திருக்கோயிலூர், திருமாற்பேறு.

சுவாதி நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம்  திருவிடைமருதூர்.மற்ற தலங்கள் நட்சத்திரத்திற்குரிய திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர்,பிள்ளையார்பட்டி, நயினார் கோயில், ஸ்ரீரங்கம்.

விசாகம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் கபிஸ்தலம். மற்ற தலங்கள் - திருமலைக்கோயில், அத்தாளநல்லூர், தீயத்தூர்,திருநன்றியூர், நத்தம்.

அனுஷம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் நாச்சியார் கோயில். மற்ற தலங்கள் - திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருப்புனவாசல், திருக்கண்ணமங்கை, நீடூர், திருநன்றியூர்.

கேட்டை நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் வழுவூர்.மற்ற தலங்கள் - பிச்சாண்டார் கோயில், பசுபதி கோயில், பல்லடம், திருப்பராய்த்துறை.

மூலம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் மயிலாடுதுறை. மற்ற தலங்கள் - மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர், குலசேகரப்பட்டினம், பொழிச்சலூர்.

பூராடம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம்  கடுவெளி. மற்ற தலங்கள் சிதம்பரம், இரும்பை மகாகாளம்.

உத்திராடம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் இன்னம்பூர்.மற்ற தலங்கள் - கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி,திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவணம், திருக்கோஷ்டியூர், திருக்குற்றாலம்.

திருவோணம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் திருவிடைமருதூர்.மற்ற தலங்கள் - ராஜேந்திரப்பட்டினம், திருமுல்லைவாயில், திருப்பாற்கடல்.

அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் திருபூந்துருத்தி.மற்ற தலங்கள் - விருதாச்சலம், திருவான்மியூர்,திருக்காட்டுப்பள்ளி, திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு,கொடுமுடி.

சதயம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் திருப்புகலூர்.மற்ற தலங்கள் -  கடம்பனூர், கோயில் கடம்பனூர், ஆதி கடம்பனூர்,இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர்,கடம்பர் கோயில், மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில், மதுரை.

பூரட்டாதி நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் திருக்குவளை.மற்ற தலங்கள் - நட்சத்திரத்திற்குரிய ரெங்கநாதபுரம்.

உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம்  திருநாங்கூர்.மற்ற தலங்கள் - தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோயில்.

ரேவதி நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம்  இலுப்பைப்பட்டு. மற்ற தலங்கள் - காருகுடி, இரும்பை மாகாளம், திருச்செங்கோடு.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.