அஷ்டதிக் பாலகர்கள்

  கோமதி   | Last Modified : 15 Sep, 2018 03:29 pm

the-ashtathik-balagargal

அஷ்டதிக் பாலகர்கள்

நம்மைச் சுற்றி எட்டு திசைகளிலும் இருந்து, நாம் செய்யும் எல்லா செயல்களையும் கவனித்து, அதற்கு சாட்சியாகவும் இருக்கும் திசைநாயகர்களே,அஷ்டதிக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எண்திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பவர்களும் அவர்களே.இவர்களை வணங்கினால், சர்வமங்களமும் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.  வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமானவர்களாக சிறப்பித்து சொல்லப்படும் ஈசானனும், குபேரனும் இந்த அஷ்டதிக் பாலகர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். 

இந்த அஷ்டதிக் பாலகர்கள் யார்? அவர்களுக்குரிய திசை என்ன? வணங்குவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். 

1 , இந்திரன் (கிழக்கு) :- ஐஸ்வர்யங்களை வாரிவழங்கி ஆரோக்கியம் அளிப்பவர்.

2, அக்கினி (தென் கிழக்கு) :- உடலுக்கும் ஒளியையும் வனப்பையையும் தருபவர்.

3, யமன் (தெற்கு) :- தீவினையால் வரும் துன்பத்தை அகற்றி நல்வினை பயன்களைக் கொடுப்பவர்.

4, நிருதி (தென் மேற்கு) :- எதிரிகளால் ஏற்படும் அச்சத்தை போக்கி வீரத்தை தருபவர்.

5, வருணன் (மேற்கு) :- மழை தந்து பயிர்களையும் உயிர்களையும் காப்பவர்.

6 , வாயு (வட மேற்கு) :- வடிவமில்லாதவர் உயிருக்கு ஆதாரமானவர். ஆயுள் விருத்தி தருபவர்.

7, குபேரன் (வடக்கு) :- சகல செல்வங்களையும் தந்து, சுக போக வாழ்வு தருபவர்.

8, ஈசானன் (வட கிழக்கு) :- மங்கள வடிவமானவர், அறிவும் ஞானமும் அளிப்பவர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.