• விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!

நரசிம்மர் 25

  கோமதி   | Last Modified : 20 Sep, 2018 05:59 pm

narasimha-25

உலகை காக்க ஸ்ரீமன் நாரயணன் பல அவதாரங்களை எடுத்திருந்தாலும் அவைகளில் நரசிம்மர் அவதாரமே உக்கிரமானது.இருந்த போதிலும் தீவினை அகலவும் வாழ்க்கையில் சத்ருக்கள் பயமில்லாமல் இருக்கவும் அனைவராலும் போற்றி வணங்கப்படுபவரும் அவரே. நரசிம்மரைப் பற்றிய சில தகவல்களை இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்வோம். 

1.நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.

2.நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.

3.நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

 4.நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

5 .நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.

6.சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.

7.எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்”என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.

8. . நரசிம்மரை வழிபடும் போது ``ஸ்ரீநரசிம்ஹாய நம'' என்று சொல்லி ஒரு பூவைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.

9.நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

10.நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.

11. நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.

12.நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

13.சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.

14. மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.

15. ``அடித்த கை பிடித்த பெருமாள்'' என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.

16. ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிறது. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.

17.இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். 

18. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியத்தில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

19. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 

20. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

21. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பாகைம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.

22.மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.

23. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

24. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.

25. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

"ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் "

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.