குருவாயூரப்பனின் நாராயணீயம் உருவானது இப்படித்தான்

  கோமதி   | Last Modified : 21 Sep, 2018 02:06 pm

this-is-how-the-narayaneeyam-of-guruvayoorappan-originated

 மலையாள தேசத்தில் ஒரு ஆச்சார நம்பூதிரி  குடும்பம். அதில் ஒருவருக்கு உடலில் , வாத நோய் கண்டது. அந்த நம்பூதிரி எங்கெங்கோ மருத்துவர்களிடம் அலைந்தும் பயனில்லை.ஒரு நாள் அவர் தன்னிடம் வேலை செய்யும் கோபாலனை  கூப்பிட்டு ''யாரோ ஜோசியர் ஊருக்கு வந்திருக்கிறாராம். பல வியாதிகளுக்கு அவரிடம் மருந்து இருக்கிறதாம். என்னால் நடக்க முடியவில்லை. நீ அவரைப் பார்த்து என் நிலைமையைச் சொல். அவரிடம் ஏதாவது மருந்து வாங்கி வா'' என்று அனுப்பினார்.

 ஜோசியரைப் பார்த்துவிட்டு வந்த கோபாலனிடம்,''என்னப்பா ஆயிற்று? எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று ஜோசியர் சொன்னாரா? '' எனக் கேட்டார் நம்பூதீரி'' ஐயா, அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது'' என்று கூறினார். ஆனால் அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சி .புனிதமான க்ஷேத்ரமான குருவாயூரில் நீங்கள் மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடினால் வியாதி குணமாகுமாம்'' என்றான் கோபாலன்.நம்பூதிரி யோசித்தார்.  ஜோசியர் கூறியதன் உட்பொருள் புரிந்தது.மனம் சந்தோஷம் அடைந்த நம்பூதிரி, ''கோபாலா, வாடா, நாம் இன்றே குருவாயூர் போகணும். ''என்றார்.

''இது  அக்கிரமம். நான் வரமாட்டேன். உங்களையும் போக விட மாட்டேன். அதெப்படி நீங்கள் குருவாயூர் க்ஷேத்ரத்தில் கோவிலுக்குள்ளே போய் அனாசாரம் பண்றது. நான் ஒப்புக்கொள்ள  மாட்டேன். உங்களுக்கு எப்படியாவது வியாதி குனமாகாதா என்று இப்படி செய்ய பிடிக்கலாம். அந்த பாவத்துக்கு நான் துணை போக விரும்பலே.''  என்று  கோபத்துடன் கோபாலன் கத்தினான்.' ஜோசியன் சொன்னதுக்கு வேறே அர்த்தம்டா , ஜோசியன் சொன்னதன் அர்த்தம் . ''மத்ஸ்யம் தொட்டுப் பாடணும்'' என்றால் சாதாரண மீன் என்று நீ ஏன் நினைக்கிறே? பகவான் குருவாயூரப்பனின் தசாவதாரத்திலே முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான்.'மத்ஸ்யம் தொட்டு'' என்றால் மத்ஸ்ய அவதாரத்திலிருந்து தொடங்கி தசாவதாரம் பத்தையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரங்களைப் பற்றி குருவாயூரில் பாடப் போறேன்.. என்னை இப்பொழுதே குருவாயூருக்கு அழைத்துச் செல்.'' என்றார் நம்பூதிரி.அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட , நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததுமே மனம் ஆனந்தக் கூத்தாடியது. பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது.

''நாராயண நம்பூதிரிக்கு  எந்த மருந்திலும் குணமாகாத வாத நோய், வெறுமே பாட்டுப்பாடுவதால் மட்டும் குனமாகப்போகிறதா என்ன ? '' என்று ஏற்கெனவே நொந்து போயிருந்த அவர் குடும்பம் ,உறவினர்கள் அவநம்பிக்கையுடன், வெறுப்புடன், வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர்.அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர். அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர். '' ஆஹா என் பகவானே ஸ்நானம் செய்த குளமாச்சே இது ? இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்'' -- அவர் மனம் துடித்தது. புது வஸ்த்ரம் உடுத்தினர். தினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக -கண்ணுக்குத் தெரியாமல் வந்து குருவாயூரப்பனை தொழுது செல்லும் முப்பத்து முக்கோடி தேவர்களுள் ஒருவராக நம்பூதிரியும்  உள்ளே நுழைந்தார். இவரைக் கண்ட தேவர்கள், இவரால் நாராயணியம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று பின்னால் உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள்,பகவானுக்கு வலப் பக்கம், தமக்கு இடப்பக்கம் உள்ள திண்ணையில் அவரை அமர வைத்தனர். அவரது உடல் பரவசத்தால் சிலிர்த்தது. சாதாரண மானிடனான என்னை அந்த பகவானின் கருணையன்றி வேறு எது இங்கு அழைத்து வரமுடியும்? எப்பேர்பட்ட அழகு வாய்ந்த இவரைப் பாட என்னால் முடியுமா? அதற்கு நான் தகுதி உடையவனா? அந்த பகவான் என்னை ஏற்றுக் கொள்வானா? எனஆயிரம் கேள்விகள்.நம்பூதிரி அந்த மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. நம்பூதிரிக்கோ வாத ரோகம் . தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை.

அப்போது அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு, ''ஏ உன்னிக் கண்ணா! கிருஷ்ணா! பரந்தாமா!'' என்று கதறுகிறார். '' இதோ பார் குட்டி கிருஷ்ணா உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால் எப்படி நாராயணியம் எழுத முடியும் னு நீ நினைக்கிறாய்? அதனால் நீ முதல்லே எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா'' என்று அழுது கண்ணீர் மல்குகிறார்.அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் நம்பூதிரி மனம் வருந்தி கண்ணனிடம்'' சரி கிருஷ்ணா, நீ எனக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். கழுத்தையாவது திருப்பி உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். நான் இப்போ தான் முதன் முதலில் குருவாயூர் வந்திருக்கிறேன். இதற்கு முன் உன்னைப் பார்த்தது கூட கிடையாது. என் காதால் மட்டுமே இதுவரை உன் புகழைக் கேட்டிருக்கிறேன். உன் சௌந்தர்ய ரூபத்தைப் பார்க்காமல், உன் மேனி அழகைக் காணாமல், உன் புராணமாகிய நாராயணியத்தை, நான் எதை நினைச்சு எழுத முடியும்? நீயே சொல்லு, அதனால் தான் கேட்கிறேன் நீ உன் தரிசனத்தை முதலில் எனக்கு கொடு'' என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்டார் .

இப்போது குருவாயூரப்பன் முதன் முதலில்  நம்பூதிரியிடம் பேசுகிறான் .''நாராயண நம்பூதிரி, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் என்னால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்றைக்கு நீ இங்கே வந்த காரியம் முடிவடைகிறதோ, அன்றுதான் உன் வியாதி நீங்கும் சரியா ?'' '' அடே, குட்டி கிருஷ்ணா, எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும்? ''. '' நம்பூதிரி, நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு உன்னுடைய கழுத்தை சாய்த்துதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? என் கழுத்தின் ரெண்டு பக்கமும் நன்றாகத்தானே இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும் அல்லவா ? நம்பூதிரி , நானே என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து, நீ நாராயணியம் பாட ஆரம்பி'' என்று கூறி கிருஷ்ணன் அனுக்கிரஹம் செய்கிறார்.அப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கு ஒரு செப்புப் பட்டயம் வைத்து, 'நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம்'' என்று எழுதி வைத்திருக்கின்றனர்.

எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணீயத்திற்கு உண்டு. என்ன வென்றால், இந்த நாராயணீயம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணை போல் அமைந்திருக்கிறது.குருவாயூரில் பட்டத்ரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மகா பாக்யத்தைப் பெற்றார்.! பேசியது மட்டுமல்ல ஒரு நண்பனாக, தந்தையாக, குழந்தையாக, பணியாளாக என அத்தனை பாவங்களிலும் அவரோடு பேசுகிறார்.

ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.