உங்களுக்கு நாகதோஷம் உள்ளதா ?

  கோமதி   | Last Modified : 01 Oct, 2018 03:09 pm

do-you-have-a-naga-dosham

ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களுமே நாகங்கள். இந்த  ராகு, கேது ஆகிய இரு கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் சர்ப்ப தோஷம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கிரகங்கள் எந்த வீட்டில் உள்ளன என்பதை வைத்து அறிந்து கொள்ள முடியும். பாம்பின் தலையை ராகு என்றும் உடலைக் கேது என்றும் குறிப்பிடுகிறார்கள்.வானில் இருக்கும் ராகுவும், கேதுவும் பின்னோக்கி நகர்வதாக அறிவியலார் கூறுகின்றனர். ஆகையால் இவ்விரு கிரகங்களையும் சாயாகிரகங்கள் என்கிறது ஜோதிட நூல்கள்.

ராகு கேது தோஷங்களால் ஏற்படும் விளைவுகள் , பரிகாரங்கள் ஆகியவற்றையும் ராகுவைப் பற்றியும் அறிவோம்.

ராகுவின் கதை 

ராகு, ஸம்ஹதா தேவியின் மகனாவார். தேவரும், அசுரரும் பார்கடலில் அமிர்தம் வேண்டி மந்தர மலையை மத்தாக்கி வாசுகியைக் கயிறாக்கிக் கடைந்தனர். பார் கடலில் இருந்து பல பொருட்கள் வெளிவந்தன. கடைசியாகத் தன்வந்திரி பாற்கடலில் இருந்து எழுந்தார். அவரது கரங்களில் அமிர்த கலசம் இருந்தது.அதை அசுரர்கள் பிடுங்கிக் கொண்டனர். இந்தச் சமயத்தில் மகாவிஷ்ணு மோகினி வடிவத்தில் வந்தார். பேரழகிய வடிவ மோகினியை கண்ட அசுரர்கள் மயங்கி, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அமிர்தத்தைப் பங்கிட்டுத் தருமாறு வேண்டினர். மோகினி தேவர்களுக்கு அமிர்ததத்தைப் பங்கிட்டுக் கொடுத்து கொண்டு வந்தாள். அப்போது ராகுவும் கேதுவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் தேவர்களின் உருவம் கொண்டு அமர்ந்து அமிர்தத்தை உண்ண ஆரம்பித்தனர். 

அவர்கள் சாப்பிட்ட விதத்தைப் பார்த்த சூரியன், சந்திரன் ஆகியோர் அவர்கள் அசுரர்கள் என்பதை உணர்ந்தனர். இதையடுத்து மோகினி, கரண்டியினால் ராகுவின் தலையை வெட்டினாள். உடனே ராகுவின் தலை ஆகாயம் சென்றது. தலையற்ற முண்டம் தரையில் வீழ்ந்தது. இதனால் அசுரர்கள் கொதித்தெழுந்தனர். தங்கள் இனம் அவமதிக்கப்பட்டதென கொதித்தனர். இதனால்  தேவர்- அசுரர் போராட்டம் வெடித்தது.

அதில் ராகுவின் தலை சிவசிரஸில் இருக்கும் சந்திரனைக் கவ்வியது. அப்போது சந்திரனின் தலையில் உள்ள அமிர்தத்தை ராகுவின் தலை பருகியதால் ராகுவிற்குப் பல தலைகள் உண்டாயிற்று. ராகுவின் பல தலைகளைக் கண்டு தேவர்கள் பயந்தனர். சிவபெருமான் ராகுவின் தலைகளை மாலையாக்கிக் கழுத்தில் அணிந்து கொண்டார்.ராகுவின் தலைகள் அமைதி அடைந்தன. தேவர்களின் பயம் நீங்கியது.சிவபெருமானின் கழுத்தில் மாலையாகும் பாக்கியம் கிடைத்ததால்  ராகு, ராஜ கிரகமாய் இருக்கும் தன்மையைப் பெற்றான்.ராகுவைப்போலவே கேதுவும் அமிர்தம் பட்ட காரணத்தால் உயிர் பெற்று பல வால்களைப் பெற்றான். சிவனது அருளால் கிரகமாகும் பேற்றைப் பெற்றான்.

ராகு கேது தோஷம் - எளிய பரிகாரங்கள்.

சர்ப்ப தோஷம் பலவித வியாதிகளை உண்டாக்கும், குழுந்தை பாக்கியம் கிடைக்காது. ராகுத் தலமாக நாகேஸ்வரம் உள்ளது. கேது தலங்களாக ஸ்ரீ காளகஸ்தி, பெரும் பள்ளம் ஆகியவை உள்ளன. இரண்டு கிரகங்களையும் வழிபடும் தலம் திருப்பேரை.

கேதுவைத் திருப்திப்படுத்த மொச்சைப் பயிரைத் தானமாக அளிக்கலாம். இவரை உபாசிப்பவன் கீழான ஆசனத்தில் அமரக் கூடாது. கருகிப் போன ஆகாரங்களை உண்ணக் கூடாது. இவரை உபாசிப்பதால் அந்தஸ்து உயரும். 
ஆடி மாதம் சுக்கில பட்சத்தில் கேது உதித்தார். ருத்திரனுடைய நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமையாகும். இந்த விசேஷ நாட்களில் கேதுவை வழிபடுவது சிறப்புடையதாகும்.

ராகு கேது இந்த இரண்டு கிரகங்கள் நம்மை பயமுறுத்துவது அல்ல. உரிய காலகட்டங்களில் முறையான பரிகாரங்களை செய்வதன் மூலம் நற்பலன்களை நிச்சயமாக அடைய முடியும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.