ஆன்மீக செய்தி – அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள்

  கோமதி   | Last Modified : 25 Sep, 2018 12:32 pm

spiritual-message-some-spiritual-references-to-know

ஆன்மீகம் என்பது கடல் போன்றது. அதில் நமக்கு தெரிந்த செய்திகள் சில துளிகள் தான். இந்த பதிவில் அவசியம் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில ஆன்மீக குறிப்புகளைப் பார்ப்போம். 

1.இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.

2. அமாவாசை அன்று  முடிந்தவரை நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று நமது வீட்டிற்கு  அடுத்தவரை அழைத்து உணவு அளிப்பது பெரும் புண்ணியம்.

3.கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது .

4.காயத்ரி மந்திரத்தை சுத்தமான இடத்தில் தான் ஜபிக்க வேண்டும். பிரயாணத்தின் போது, சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.

5. இறைவனுக்கு சூடம் காண்பிக்கும்போது, இறைவனின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.முகத்துக்கு ஒரு தடவை கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்கவேண்டும்.

6 வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

8.இறைவனுக்கு உகந்தவை இவையே

சிவனுக்கு உகந்தது- வில்வம் 

விஷ்ணுவிற்கு உகந்தது - துளசி 

விநாயகருக்கு -அருகம்புல் 

பிரும்மாவிற்கு உகந்தது-அத்தி இல்லை 

இவைகளை மாற்றி மற்ற தெய்வங்களுக்கு  வைத்து வணங்க கூடாது.

9.கலசம் சொல்லும் செய்திகள் 

கலசம்(சொம்பு) − சரீரம்

கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு

கலசத்தின் உள் இருக்கும் தீர்த்தம் (நீர்) − இரத்தம்

கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை

கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்

கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி, இலை − மூலாதாரம்

கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு)

உபசாரம் − பஞ்சபூதங்கள்

10. தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானங்கள் 

சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,

தயிர் சாதம், பலகாரம்

வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்

ஆனி – தேன்

ஆடி – வெண்ணெய்

ஆவணி – தயிர்

புரட்டாசி – சர்க்கரை

ஐப்பசி – உணவு, ஆடை

கார்த்திகை – பால், விளக்கு

மார்கழி – பொங்கல்

தை – தயிர்

மாசி – நெய்

பங்குனி – தேங்காய்

11.திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக கிடைக்கும் .அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து பூசிகொள்ள கூடாது 

12.பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.