சிவ பூஜையில் கரடியா?

  கோமதி   | Last Modified : 28 Sep, 2018 04:29 pm
shiva-puja

பொதுவாக பூஜை , சுப நிகழ்ச்சிகள் செய்யும் பொழுது இடையில்  யாரேனும் வந்து விட்டால் சிவ பூஜையில் கரடி மாதிரி? என்ற பழமொழி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதென்ன சிவபூஜைக்கும் கரடிக்கும் உள்ள சம்பந்தம். விளக்கம் தருகிறது இந்தப் பதிவு.

இன்றைக்கும் பலரும் முக்கியாமன விசயங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கே யாராவது வந்துவிட்டால் கரடி என்பது வழக்கமாகிவிட்டது. பலரும் இந்த கரடி என்பது காட்டில் வாழும் மிருகம் என்றே கருதுகின்றனர். சிவபூஜை கரடி மிருகமல்ல.

பழங்காலத்தில் நாட்டை ஆட்சி செய்தது மன்னன் என்றாலும்  அந்த மன்னனுக்கும் மேலாக பேரரசன் எம்பெருமான் சிவன்.அன்றைக்கு ஆட்சி பொறுப்பில் இருந்த அரசர்கள் , மக்களுக்கு செய்கின்ற நற்செயல் எல்லாம் மகேசனுக்கு செய்வதே என்பதை  நன்கு உணந்தவர்கள். எந்த ஒரு செயலுக்குக்கும் முன்பு அரசர்கள் சிவபூஜை செய்வது வழக்கம்.  சிவ பூஜை செய்ந்து ஈசனை வழி பட்ட பின்னரே அரியணையில் ஏறுவார்கள் அப்படி இறைபக்தி.அரசர்கள் ,சிவ பூஜை செய்யும் பொழுது ஏதேனும் தடங்களோ இடையூறோ ஏற்படாமல் இருக்க. அக்காலத்தில் கரடி வாத்தியம் வாசிக்க செய்வார்கள்

பின்பு சிவ பூஜையில் ஈடுபடுவார்கள் இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்திய மாகும் ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.இன்றளவும் ஏதேனும் செயல்களில் தடங்கல் ஏற்பட்டால் சிவ பூஜையில் கரடி என்ற பழமொழியை   சொல்லி கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு சிவ பூஜை குறைந்து வருகிறது. சிவபூஜையில் வாசிக்கப்படும் கரடி வாத்தியமும் மறைந்தே போய்விட்டது. இனி எவரேனும் சிவபூஜையில் கரடி என்றால் தெளிவாக விளக்கி சொல்லுங்கள் கரடி என்பது ஒரு வாத்தியம் என்று.

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close