ஏன் தெரியுமா ?- வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாதா?

  கோமதி   | Last Modified : 28 Sep, 2018 05:27 pm

do-you-know-why-why-should-not-cut-nail-on-fridays

நம் முன்னோர்கள் சொல்லிவிட்ட சென்ற ஒவ்வொரு வாக்கியமும் வார்த்தைகளும் பெரும் பொருள் படைத்தவை.அவற்றை உணர்ந்து கொள்ளாத அறியாமை தான் , இதெல்லாம் எதற்கு , என்ன பழக்கங்கள் என்று நம்மை சலிக்க செய்கிறது. பொருள் உணர்ந்து பழக்கங்களை அறிந்து கொண்டால் அதன் மதிப்பு நமக்கு புரியும். அதற்கான ஒரு சிரிய முயற்சியே இந்தப் பதிவு.

செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்பது ஐதீகம்.அதேப் போல செவ்வாய் கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உரியது என்பது மட்டுமின்றி அன்று முடியோ நகமோ வெட்டினால் துரதிஷ்டம் வந்து விடும் என்று கூறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும் என்று கூறப்படுகிறது. மேலும் சனி கிரகத்தின் சக்தி குறைந்து பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் செவ்வாய்க்கிழமைகளில் பெரும்பாலான முடிதிருத்த நிலையங்கள் இயங்குவதில்லை.

வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய உகந்த  நாள். அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்கக் கூடாது என்பது நம்பிக்கை. நகம் முடி இரண்டுமே வெட்டினாலும் வளர்வது என்றாலும் அதுவும் நமது உடலில் ஒரு அங்கமாகும்.பொருளை இழப்பதே இழப்பு என்கிறபோது , உடலின் உறுப்பான நகத்தை  இழப்பது பெரும் தவறு, இதனால் தான் தான் வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்றனர் முன்னோர்கள்.

மூத்தோர் சொல் கேட்டு நலம் பல பெறுவோம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.