சனி பகவான் நம்மிடம் எதிர்பார்ப்பது இதை தானே!

  கோமதி   | Last Modified : 06 Oct, 2018 02:47 pm

saturn-expects-this-only-from-us

ஒருவருடைய வாழ்க்கையில் நடைபெறும் பாவ புண்ணிய கணக்குகளை சரிப்பார்த்து,அவர்கள் மனம் திருந்துவதற்கு சில கடுமையான சோதனைகளைக் கொடுத்து திருத்தும் தர்ம தேவதையே சனி பகவான். அவரின் சோதனைக்கு உட்படாதவர்களே யாரும் இருக்க முடியாது. அவரின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள நமக்கு தெரிந்ததும் தெரியாததுமான சில குறிப்புகள்.

சனிக்கிழமைதோறும் விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும். சனி பகவானின் வாகனமான காகத்திற்கு தினமும்  எள் கலந்த சாதம் வைக்கலாம். இதனால் ஜோதிடம் மற்றும் ஆன்மீக  ரீதியாக மட்டுமல்லாமல் ஒரு ஜீவனுக்கு உணவளித்த மனதிருப்தியும் கிடைக்கும்.

சனி பகவானுக்கு உகந்த உலோகம் இரும்பு என்பதால், சனிக்கிழமை தோறும் இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடலாம்.

கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்தால் அவரின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். மரங்களில் வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி மட்டும் தான்.ஈஸ்வரனின் அருளைப் பெற்ற சனி பகவானை சந்தோஷப்படுத்த, சனிக்கிழமை தோறும் சிவபெருமானுக்கு வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சாற்றி வணங்கலாம்.

பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்க வேண்டும். சனி பிரதோஷ வழிபாடு அனைத்திலும் சிறந்தது.

சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும். குறிப்பாக சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. இதுவும் ஆரோக்கிய ரீதியாக நமது நன்மையைக் கருதி சொல்லப்பட்டது.

ஸ்ரீஆஞ்சநேயரின் பக்தர்களை சனி தொல்லைக் கொடுக்கமாட்டார் என்பதால், அவருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்குவதும்,தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வருவதும் நல்ல பலனைக் கொடுக்கும்.

சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

இந்த வழிபாட்டு முறைகள் எல்லாம் நம்மை ஒரு ஒழுங்கிற்குள் கொண்டு வருவதற்காக சொல்லப்பட்டவை. இவற்றை எல்லாம் விட இறைவன் நம்மிடம் விரும்புவது கருணை மிகுந்த நல்ல மனதை. 

அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்வதுடன், உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள். ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம். அன்னதானத்திற்கு உதவி செய்யலாம். இவை நம்மை மனித நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர்த்தும்.இதை தானே நியாய தேவதையான சனி பகவானும் நம்மிடம் எதிர்பார்ப்பது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.