ஆன்மீக செய்தி - மஹா புஷ்கர ஸ்நான விதிகள்

  கோமதி   | Last Modified : 10 Oct, 2018 01:13 pm

spiritual-news-rules-for-maha-pushkara

புஷ்கரத்தின் போது நதியில் நீராடுவது எவ்வளவு முக்கியமோ,அந்த அளவிற்கு அதன் விதிமுறைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வதும் அவசியம். 

1. நீராடப் போகிறவர்கள் செருப்பு போட்டுக் கொண்டும், குடை பிடித்துக் கொண்டும் செல்லக் கூடாது.

2. நதிக்கரையில் உள்ள மண்ணை எடுத்துத் தன் உடம்பில் பூசிக் கொண்டு, நதியை வணங்கி அதனுள் இறங்க வேண்டும்.

3. சிகப்பு, கருப்பு, நீலநிற வஸ்திரம், தலைப்பு இல்லாத வஸ்திரம், ஓரத்தில் நீலக்கரை, கருப்பு கரை போட்ட வஸ்திரம் இவைகளை உடுத்திக் கொள்ளக் கூடாது.

4. நீராடும் போது சூரியபகவானுக்கு எதிர் முகமாக நின்று நீராட வேண்டும் என்பது விதி. ஆனால், புனித நதிகளில் நீராடும் போது, நதியின் ஓட்டத்திற்கு எதிர் முகமாக நின்றே நீராட வேண்டும். முதுகைக் காட்டக் கூடாது.

5. நதியில் உள்ளம் குளிர குடைந்து மூன்று முறை மூழ்கி எழ வேண்டும். 

6. ஆண்கள் அரைஞாண்கயிறு இல்லாமல் நீராடுதல் கூடாது. அரைஞாண் கயிற்றில் வேஷ்டியை கட்டிக் கொண்டும் நீராடக் கூடாது. 

7. பெண்கள் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது.

8. நீராடும் போது எச்சிலைக் காறி உமிழ் வதும், சிறுநீர் கழிப்பதும் பாபச் செயலாகும்.

9. நதியினுள் ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும்.

10. நீரிலிருந்து வெளியே வந்து தலைமயிர்களை உதறக் கூடாது.

11. நீராடி முடித்தவுடன், காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு, ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும். மேலாக எடுத்துப் போடக் கூடாது.

12. மிக முக்கியமான விஷயம் எந்த படித்துறையிலும் துணிகளை விடக்கூடாது. அது மிகப் பெரிய பாவச்செயல். தங்கள் சந்ததிகளுக்கு பாவத்தை சேர்த்து வைக்கும் செயலாகும்.

13. நெற்றியில் தங்கள் மதச்சின்னங்களை அணிந்து கொண்டு நதியை மீண்டும் ஒருமுறை புரோக்ஷித்து (தெளித்து) கொள்ள வேண்டும்.

14. ஒவ்வொரு நாளும் பிரம்ஹ முகூர்த்தத்தில் (காலை 4.30 - 6.00) நீராடுவது சிறந்த பலனைக் கொடுக்கும். 

15. திருமணமாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடினால் திருமண தோஷம் விலகும். 

16. சந்நியாசிகள் அதிகாலை, மதியம், சூரிய அஸ்தமனம் ஆகிய மூன்று வேளைகளிலும் நீராடலாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.