பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா

  கோமதி   | Last Modified : 15 Oct, 2018 12:02 pm
mysore-dussehra-mark-of-tradition-and-heritage

இந்தியாவை கடந்து உலகில் இந்துக்கள் வாழும் நாடுகளிலும் கூட கோலாகலமாக மிகுந்த விமர்சையுடன் கொண்டாடப்பட்டு வருகிறது தசரா எனப்படும் நவராத்திரி உற்சவங்கள். தமிழகத்தில் குலசேகரப்பட்டினம் தசரா கொண்டாட்டம் உலகப் பிரசித்தி என்றால் மைசூர் தசராவைப் பற்றி சொல்லவே வேண்டாம். கண்கவர் கலாச்சார நிகழ்ச்சிகள், யாணை மீதான ஊர்வலங்கள், ஊர் முழுக்க வண்ண வண்ண கோலங்களும் விளக்குகளும் என மைசூர் முழுக்க திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. 

அன்னை பராசக்தி சாமுண்டீஸ்வரியாக மாறி  மகிஷனை சம்ஹாரம் செய்த இடமே மகிஷாபுரம், மஹிஷா மண்டலம், மஹிஷுர் என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டு பின்னாளில் இந்த இடமே மைசூர் என்று மருவியது. மகிஷ வதம் நடைபெற்ற இந்த இடத்திலேயே நவராத்திரி விழா – தசாரா திருவிழா நடைபெறுவதுதான் மைசூர் தசராவின் தனிப் பெரும் சிறப்பு. அசோக சக்கரவர்த்தி காலத்திலேயே மஹிஷூர் சிறந்து விளங்கியதாக கி.மு 245-ம் ஆண்டின் இலக்கிய குறிப்புகள் உள்ளன. மிகுந்த பழமையும் பாரம்பர்யமும் நிறைந்த மைசூருக்கு பெரும் பெருமை சேர்க்கிறது தசராத் திருவிழா.408-வது ஆண்டாக இந்த ஆண்டு தசரா விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

தசரா பண்டிகையின் முதல் நாள் மைசூர் உடையார் வம்ச மன்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து  புகழ்பெற்ற அரச தர்பார் வைபோகம் நடைபெற்றது.இந்த காலகட்டத்தில்  விஜயதசமி அன்று நடைபெறும்  ஜம்பூ சவாரி எனும் யானைகள் அணிவகுப்பு பார்ப்பவர்களில் கண்களுக்கு பெரும் விருந்து.அணிவகுத்து வரும் யாணை ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையில் சாமுண்டீஸ்வரி அம்மன் 750 கிலோ எடை கொண்ட தங்க மண்டபத்தில் பவனி வந்து காட்சி தருகிறாள். அதைத்தொடர்ந்து தீப ஒளி அணிவகுப்பு என்ற விளக்கொளி வைபோகம், வாணவேடிக்கை, நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை இப்படி பல நிகழ்ச்சிகளால் மைசூர் நகரமே தேவலோகம் போல் காட்சி தரும். 

தசரா பொருட்காட்சி, தசரா திரைப்பட விழா, தசரா உணவு விழா, பாரம்பரிய இந்த பத்து நாட்கள் வைபத்தில் இரங்கயானா எனும் புராண நாடகம் முக்கிய  அடையாளமாக திகழ்கிறது. விழாவின் இறுதி நாளான விஜயதசமி அன்று சாமுண்டீஸ்வரியின் பிரம்மாண்ட ஊர்வலத்தோடு நிறைவு பெறுகிறது. அங்கு பஞ்சின கவாயத்து என்ற தீப ஒளி அணிவகுப்பு நடைபெறுகிறது. மேலும் புராணப் புகழ்பெற்ற ஒரு வன்னி மரத்துக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது. அந்த இடத்தில் இருந்த இதே போன்ற ஒரு வன்னி மரத்தில்தான் பஞ்ச பாண்டவர்கள், தங்களது அஞ்ஞாத வாசத்தின்போது தங்கள் ஆயுதங்களை மறைத்து வைத்து இருந்தார்களாம். அவர்களுக்கு சாமுண்டீஸ்வரி தேவிதான் காட்சி தந்து அருள் செய்தாள் என்பது ஐதீகம்.

வாழ்க்கையில் ஒரு முறையாவது நாமும் மைசூர் தசரா கோலாகலத்தை நேரில் கண்டு மகிழ்வோம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close