சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்

  கோமதி   | Last Modified : 16 Oct, 2018 05:58 pm
saraswathi-pooja-goddess-saraswathi-s-favourite-pooja-things

உலகில் உள்ள சகல வித்தைகளின் வடிவமாக விளங்குபவள் அன்னை சரஸ்வதி. புரட்டாசி மாதம் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சரஸ்வதி தேவி அவதரித்தாள். நாம் தெய்வங்களுக்கு செய்யும் பூஜைகளில், பூஜை என்ற வார்த்தையைச் சேர்ந்துச் சொல்வது சரஸ்வதி பூஜை மட்டுமேயாகும். கலைகளைக் கற்க விஜயதசமி மிகவும் சிறந்த நாள் என்பதால் அன்று சரஸ்வதியைத் தொழுதால் எல்லாக் கலைகளிலும் சிறந்து விளங்கலாம் என்பது ஹிந்துக்கள் மத்தியில் தொன்று தொட்டு நிலவி வரும் நம்பிக்கையாகும். வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பவளும் ,வெண்மை நிறமுடையவளாயும், புன்னகை ததும்பும் திருமுகத்துடன், தூய்மையான ஆடைகளுடன், வீணையை புத்தகமாகத் தரித்தவளும்,தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும், முனிவர்களால் போற்றப்பட்டவளுமான சரஸ்வதி தேவியை என்ன பொருட்கள் கொண்டு பூஜிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் நாம் அறிந்து கொள்ளலாம். 

நவநீதம், தயிர், பால், பொரி, எள், லட்டு, கரும்பு, கரும்பின் சாறு, வெள்ளைப்பாகு, வெல்லம், ஸ்வஸ்திகம், சக்கரை, பிளவுபடாத வெள்ளத் தானிய அட்சதை,அவற்றால் உண்டாக்கிய அவல், வெண்மோதகம், நெய்யும் உப்பும் கலந்த வெண் பொங்கல், நெய் கலந்த தினை கோதுமை சுவஸ்திகம் (ஆசனம்) ஆகியவற்றில் மாம்பழம், வாழைப்பழம், ஆகியவற்றை தோல் உரித்து சேர்த்து பிசைந்து செய்த பலகாரம், பரமான்னம் எனப்படும்நெய்கலந்த தூய அன்னம், தேங்காய், இளநீர், வெட்டிவேர், பக்குவ நிலையிலுள்ள வாழைப்பழம், வில்வ பழம், இலந்தைப் பழம்,சந்தனம், புத்தம் புதிய வெண்ணிற ஆடை, அழகான சங்கு அணிகள், முத்தார ஆபரணம் ஆகியன சரஸ்வதி பூஜைக்குரியனவாகும்.

மாணிக்க வீணை ஏந்திய அந்த மாதேவி கலைவாணியை சரஸ்வதி பூஜை நன்னாளில் நாம் போற்றி வணங்கி அவளிடம் ஞானத்தை வேண்டி நிற்போம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close