பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)

  பாரதி பித்தன்   | Last Modified : 21 Oct, 2018 02:39 pm
father-they-do-not-know-what-they-are-doing

முதல் பாகத்திற்கு கிளிக் செய்யவும்... 

பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள்... தொடர்ச்சி

சபரிமலைக்கோயிலில் ஒவ்வொரு விஷயமும் தேவபிரசன்னம் பார்த்துதான் நடக்கிறது. மேலும் அங்கு பூஜை செய்ய வேண்டிய மேல்சாந்தி கூட குலுக்கல் முறையில் தெய்வத்தின் உருவமாக இருக்கும் குழந்தை மூலம் தான் தேர்வு செய்யப்படுகிறார். இப்படி ஒவ்வொன்றும் சாஸ்திர ரீதியாக நடக்கும் கோயிலில் இப்படி ஒரு தீர்ப்பு என்ன மாற்றத்தை கொடுத்துவிட முடியும்.

சரி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துவிட்டது என்று எத்தனை பெண்கள் வரிந்து கட்டிக் கொண்டு சென்றாள் என்றால் இதுவரை சென்றதில் பக்தை என்று யாரும் கிடையாது. அதிலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய பெண்கள் சென்றார்கள் என்றால் அது ஐயப்பனை தரிக்க வேண்டும் என்பதை விட சபரிமலை ஐயப்பனை அவமானப்படுத்த வேண்டும். இந்துக்கள் புனிதமாக கருதும் தெய்வத்தை அவர்களிடம் அவமானப்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது. இதை கண்டிக்க வேண்டிய ஜமாத், கிறிஸ்தவ அமைப்புகள் மவுமாக இருப்பதை பார்த்தால் இதில் ஏதோ சதி இருக்கிறதோ என்று என்னத் தோன்றுகிறது. இந்த சதியை முறியடிக்க வேண்டிய கட்டாயம் ஐயப்பனை நம்பும் பக்தர்களுக்கு உள்ளது. அதுதான் தற்போது சபரிமலையில் நடக்கிறது.

இந்த பிரச்னைக்கு தீர்வு தான் என்ன ? வழக்கம் போலவே தெய்வபிரசன்னம் பாருங்கள் அதில் பெண்களை அனுமதிக்கலாம் என்று சொன்னால் அதன்படி நடக்கலாம். அதை விடுத்து இப்போது நாம் ஆடும் ஆட்டம் தவறானது. நமக்கே தெரியாமல் தெய்வ குத்தம் செய்கிறோம். அதனால் ஏற்படும் பாதிப்புகளை அறிவதற்கு நமக்கு அறிவில்லை. மேலும் மடாதிபதிகள், சன்யாசிகள் கூடி இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். அதுதான் சபரிமலை கோயிலின் வழக்கத்தில் முறையாக மாற்றம் செய்ய வேண்டும். எந்த மாற்றமும், ரயில் தடம் மாறுவதைப் போல இருக்க வேண்டுமே தவிர தடத்தையே விட்டு ரயில் கவிழ்ந்துவிடுவது போல இருக்க கூடாது. இப்போது நாம் ரயிலையே கவிழ்கிறோம். அது யாருக்கும் நல்லது அல்ல.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close