பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)

  பாரதி பித்தன்   | Last Modified : 21 Oct, 2018 02:38 pm
father-they-do-not-know-what-they-are-doing

சுமார் 1960 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞன் ஒருவரை பிணைத்து மன்னரிடம் கொண்டு வருகிறார்கள். குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்படுகிறது. அனைத்தையும் அந்த வாலிபன் மவுனமாக கேட்கிறான். மன்னர் அவன் முகத்தை பார்க்கிறார். இவரிடம் ஒரு பாவத்தையும் காணவில்லையே என்கிறார். ஆனால் சமுதாயத் தலைவர்கள், மதத்தலைவர்கள் இல்லை இல்லை இவனை கொல்ல வேண்டும் என்று கூச்சல் இடுகின்றனர். அவருக்கு ஆதரவாக மக்களும் கூச்சல் இடுகின்றனர். மன்னன் கேட்கிறான் நீங்கள் சொன்னால் ஒரு குற்றவாளியை விடுவிக்கலாமே, கூறுங்கள் நான் விடுவிக்கிறேன் என்றார். ஆனால் அவர்களே குற்றவாளி ஒருவனை விடுதலை செய், நாங்கள் கொண்டு வந்த இளைஞனை துாக்கில் போடு என்று கூச்சல் இட, வேறு வழியில்லாத அரசின் இளைஞனை கொலைசெய்ய கூறிவிட்டு அந்த பாவம் தன்னை சாராது இருக்க கைகளை கழுவிவிட்டு எழந்து சென்று விடுகிறான். பின்னர் அந்த இளைஞன் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறான். அந்த இளைஞன் யார் தெரியுமா? தெரியாதவர்களுக்காக அவர் தான் இயேசு கிறிஸ்து. தேவ குமாரனை கொலை செய்கிறோம் என்று கூட .தெரியாமல் ஒரு கூட்டம் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றது. அதற்கு சற்றும் குறைவு இல்லாத பிழைதான் இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது கேரளாவில்.

ஆம் சபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் அரிசியல் சாசன பெஞ்ச் அளித்த தீர்ப்பும், இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்த தீர்ப்பும் ஒன்றுதான்.

கோயில்களில் வழிப்பாட்டு உரிமை குறித்து அரசியல் சட்டம் 26 சரது பல விஷயங்களை கூறினாலும், நடைமுறையில் ஆங்காங்கே வேறுபாடுகள் இருகின்றன. உதாரணமாக சில கோயில்களில் ஆண்டுகள் சட்டை அணிந்து செல்ல கூடாது, செவ்வாய் கிழமை விரதம்,சில இடங்களில் ஒளைவையார் விரதம் போன்றவற்றிக்கு ஆண்கள் அனுமதி கிடையாது. ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு ஒரு நாள் கைலி அணிவித்து சப்பாத்திதான் நைவேத்தியம் இது போல பல சடங்குகள். மிகமிக தாழ்த்தப்பட்ட ஜாதி என்று சொல்பவன் வீட்டின் திருமணம், இறப்பு போன்றவற்றிக்கு சென்றால் அங்கு கூட சில சடங்குகளை பார்க்கலாம். ஆனால் அது எந்த வேதத்திலும் எழுதியிருக்காது. இப்படி வாழ்வியல் சடங்குகள் வாழ்வழியாக, குருபரம்பரையாத்தான் கடைபிடிக்கப்படுகிறது.

சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்ற தடையை நீக்க கோரி 1990ம் ஆண்டில் கேரள கோர்ட்டில் மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்கிறார். அந்த வழக்கில் 1991ம் ஆண்டு கேரள கோர்ட் தடை செல்லும் என்று தீர்ப்பளிக்கிறது. பின்னர் மீண்டும் இளம் வழக்கறிஞர்கள் சங்கம் மீண்டும் 2006ல் வழக்கு தொடர்ந்தது. அதில் பல நிலைகள் கடந்து சமீபத்தில் பெண்கள் செல்லாம் என்று தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த வழக்கில் கேரள அரசு தன் நிலையை ஆட்சிக்கு ஏற்ப மாற்றிக் கொண்டது. காங்கிரஸ் பெண்கள் செல்ல கூடாது என்றும் கம்யூனிட்ஸ் அரசு பெண்களை அனுமதிக்கலாம் என்றும் தன் நிலையை கோர்ட்டிற்கு சொன்னது.

சரி தெய்வதற்கு ஆண் என்ன பெண் என்ன ? இரண்டும் ஒன்றுதான். அதிலும் ஐயப்பன் பிறப்பே வித்தியாசமானது என்னும் போது பெண்கள் செல்வதில் ஒன்றும் கேடுவரப்போவதில்லை. ஆனால் அவர்களால் ஐயப்பன் கோயிலில் விரதமுறைகளை முழு.மையாக கடைபிடிக்கவே முடியாது. அதாவது பெண் தீட்டாக இருக்கும் போது பூஜை அறையில் கூட விளக்கு ஏற்றமாட்டாள் என்கிற போது .கோயிலுக்கு விரதம் இருந்து அன்றாட பூஜையை எப்படி அவள் செய்ய இயலும். பெரும்பாலும் 28 நாள் முதல், 30 நாளைக்குள் மாதவிலக்கு ஏற்படும் என்பது ஆரோக்கியமான பெண்களுக்கு விதி. அப்படி இருக்கும் போது 41 நாள் நிச்சயம் இல்லை. அடுத்தது அந்த காலத்தில் அவள் எப்படி உதிரப் போக்குடன் மலைமீது ஏறி செல்வாள்? இது ஒரு நல்ல பயணமாகஇருக்காமல் நகர வேதனையாகத்தான் இருக்கும். இது .போன்ற காரணங்களால் தான் சபரிமலைக்கு 10வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் போக்கூடாது என்பது. கடந்த 20ம் தேதி கூட 52 வயது பெண் சபரிமலையில் தரிசனம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகுதி-2.... கிளிக் செய்யவும்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close