ஏன் தெரியுமா? - ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்

  கோமதி   | Last Modified : 23 Oct, 2018 11:57 am
do-you-know-why-king-will-be-the-beggar-if-he-has-five

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்ற சொல்வழக்கு எல்லொருக்கும் தெரிந்த ஒன்று. ஐந்து என்ற சொல்லுக்கு இங்கு எல்லோருமே பெண் குழந்தைகளைக் குறிப்பதாக நினைக்கிறார்கள். அதனால் தான் ஒரு வீட்டில் ஐந்து குழந்தைகள் இருந்தால்,அவர்களைப் பார்த்து இப்படி சொல்லுவது வழக்கம். ஆனால் உண்மையிலேயே எந்த ஐந்து ஒரு மனிதரை ஆண்டியாக்கும் தெரியுமா?. 

1) குடும்பத்தின் பொருளாதார சூழல் தெரியாமல் ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) குடும்ப பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) அடக்கம் இல்லாத, ஒழுக்கமற்ற மனைவி,

4) உடன்பிறந்தவர்களை ஏமாற்றுவதும்,அவர்களுக்கு  துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) பெரியோர் சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் 

இவர்களை கொண்டிருப்பவன், பார் போற்றும் அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close