அங்காரகன் (செவ்வாய்) பயோடேட்டா

  கோமதி   | Last Modified : 23 Oct, 2018 04:14 pm
angaaragan-mars-biodata

ஒன்பது கோள்களில் மூன்றாவதான செவ்வாய், திருமேனி, மாலை, உடை என அனைத்தும் சிவப்பாக இருப்பதால்,இவருக்குச் செவ்வாய் எனப் பெயர். இவர் பூமாதேவியினால் வளர்க்கப்பட்டதால் இவரைப் பூமாதேவியின் மகனாகச் சொல்வார்கள்.ஒரு சமயம், சிவபெருமான் தனியாக யோகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது, அவரது நெற்றிக் கண்ணில் இருந்து, ஒரு நீர்த்துளி பூமியில் விழுந்தது. அதில் இருந்து மங்களன், ஒரு குழந்தை வடிவாகத் தோன்றினான். அவனை பூமாதேவி எடுத்து வளர்த்து வந்தாள்.அவ்வாறு வளர்க்கப்பட்ட மங்களன், சிவபெருமானை நோக்கிக் கடுமையாகத் தவம் செய்தான். அந்த தவத்தின் காரணமாக, அவன் உடம்பில் இருந்து  யோகாக்கினி கொழுந்து விட்டு எரிந்தது. அது மட்டுமல்ல! அக்கடுந்தவத்தின் பலனாக அவன், நவகிரகங்களில் ஒருவனாக இருந்து அங்காரகன் என்றப் பெயரையும் பெற்றான்.

அங்காரகன் என்று வணங்கப்படும் செவ்வாய், தன்னை வணங்குபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவன். செவ்வாய்க்கிழமைக்கு அதிபதியான இவன் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்கு உரியவன். இவன் சிவந்த மேனியன். செவ்வாடையும் செந்நிற மாலையும் அணிபவன். அங்காரகன் சக்தி, சூலம் என்னும் படைகளை ஏந்துபவன். மங்கலமான திருவுருவை உடையவன். சங்கு போன்ற திருக்கழுத்தைக் கொண்டவன். நலம்  செய்பவன். அங்காரகன் ஆடு வாகனம் கொண்டவன். மகர ராசியில் உச்சத்தை அடைபவன்.செவ்வாயின் அருள் கிடைக்க, செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமானை  வழிபட வேண்டும்.இதற்கான   காரணம், முருகனுக்கும் சிவந்த மேனி, சிவந்த ஆடை, சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியது, ஆடு வாகனம், சக்தி ஆயுதம் என அங்காரகனாகிய செவ்வாயுடன் ஒன்றிக் காணப்படுவதால் செவ்வாயன்று முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.அங்காரகன், தன்னை வழிபடுவோருக்கு நிலம் அருள்பவன். சிவந்த கண்களை உடையவன்; அநாதைகளைப் பாதுகாப்பவன். அங்காரகனுக்குரிய தலமாக வைத்தீஸ்வரன் கோயில் திகழ்கிறது.

அங்காரகன் பயோடேட்டா

நிறம்     – சிவப்பு

வாகனம்     – ஆட்டுக்கிடா

தானியம்     – துவரை

மலர்     – செண்பகம், செவ்வரளி

ஆடை     – சிவப்பு ஆடை

நவரத்தினம்     – பவழம்;

நைவேத்தியம்    – துவரம்பருப்புப் பொடி சாதம

சமித்து     – நாயுருவி, கருங்காலி

உலோகம்     – செம்பு

நட்சத்திரம்     – அவிட்டம், சித்திரை, மிருகசீரிடம்

திசை     – தெற்கு

ருசி       உவர்ப்பு

கிழமை    – செவ்வாய்

குலம்     – சத்திரிய குலம்

கோத்திரம்     – பரத்வாஜ கோத்திரம்.

ஒருவருடைய ஜாதகத்தில், சகோதரர்களின் ஒற்றுமை – வேற்றுமை; வீடு, நிலம் ஆகியவை பெற்று வாழ்வது;பகைவரை எதிர்க்கும் ஆற்றல்; வீரம்; போரில் வெற்றி பெறுவது; தீயினால் ஏற்படும் தீமைகள்; கடன் உண்டாவது;அதிகாரம் செலுத்துதல் ஆகிய நிலைகளுக்கு செவ்வாயே காரணமாக இருக்கிறார்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று வணங்கி வரலாம். செவ்வாய்க் கிழமைகளில் முருகனுக்கு விரதமிருந்து வந்தால்,தடைகள் நீங்கி சுகப்படலாம்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close