அமாவாசை அன்று இதையெல்லாம் செய்யாதீர்கள் !

  கோமதி   | Last Modified : 31 Oct, 2018 03:22 pm

dont-do-this-on-amavasya

நமது இந்து மத தர்மப்படி அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜோதிட அடிப்படையில், அமாவாசை தினத்தில் சூரியன் மற்றும் சந்திரன் ஒரே ராசியை கொண்டு ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் என்கிறார்கள். அன்றைய தினம் இந்த இரு கிரகங்களில் ஆகர்ஷண சக்தி மிக அதிகமாக இருக்கும்.அதனால் மனித மூளையில் பல மாற்றங்கள் நிகழக் கூடும். மனம் ஒரு நிலையில் நில்லாமல் அலைபாய்ந்துக் கொண்டிருக்கும்.முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்த்தல் நலம்.இதனால் தான் அமாவாசை நாட்களில் சுப காரியங்கள் செய்ய மாட்டார்கள். பொதுவாக அமாவாசை நாட்களில் சுப காரியங்கள் செய்வது கூட தவறு அல்ல. ஆனால் புதிய காரியங்களை துவங்கக் கூடாது என்கிறார்கள் பெரியவர்கள்.அன்று நமது குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் மற்றும் பெரியோர்களை வழிபடலாம், இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.

அமாவாசை  தினம், நம் முன்னோர்கள் பூமியை நோக்கி வருவதாக ஒரு ஐதீகம் உள்ளது. அப்படி இறந்த நம் முன்னோர்கள் வரும் போது ஏற்படும் ஒருவித அதிர்வலைகள் சிலவித பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் தான்,அன்றைய  தினத்தில் நம் வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது என்று கூறுகின்றனர்.அமாவாசையில் மிகக் கடினமான வேலைகள் மற்றும் உடல் ரீதியான வேலைகளை செய்யக் கூடாது. ஏனெனில் அதனால் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அவை விரைவில் குணமாகாது.

அமாவாசை அன்று முடிந்த வரையில்,பதட்டம், கோபம் கொள்ளக் கூடாது.அன்று மௌன விரதம் இருத்தல் மனதிற்கு அமைதியை தரும். அமாவாசையில்  நலிந்தோருக்கு தானம், தர்மம் செய்வதால், ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.அன்று குலதெய்வத்தை வழிபாடு மிகவும் பலன் கொடுக்கும். குறிப்பாக அம்மன் வழிபாடு செய்வது மிக நல்லது.

நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்துள்ள இந்த குறிப்புகளை நடைமுறையில் கடைப்பிடிக்க, வாழ்க்கை வளமாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.