எந்த பிரச்சனைக்கு என்ன ஹோமம் செய்யலாம்?

  கோமதி   | Last Modified : 21 Nov, 2018 12:05 pm
which-homam-to-be-done-for-problems

இந்து மத சாஸ்திரங்களில் அக்னியை வழிபடுவது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம். மிக சிரத்தையுடனும்,தூய்மையான மனதுடன் அர்பணிப்பு உணர்வுடன் செய்யப்படும் ஹோமத்திற்கு பலன் நிச்சயம்.ஹோமத்தில் அர்பணிக்கப்படும் அனைத்து பொருட்களையும் அவரவருக்கு உரியதை சூரியபகவான் உதவியுடன் சென்றடைகிறது. அதே போல் சூரியபகவான் மூலமாகவே அதற்குறிய பலனும் நம்மை அடைகிறது.நம்முடைய தேவைகள் மற்றும் பிரச்சினைக்கு ஏற்ப ஹோமங்கள் செய்து வழிபட்டால் பலன் நிச்சயம்.ஹோமங்களின் பலன்கள் நம் கண்களுக்கு தெரியாவிட்டாலும்,அதன் பலன் இறைவனை சூட்சமமாக அடைந்து, நம்மை சேர வேண்டிய காலத்தில் வந்து அடையும்.
 
ஹோமங்களும் அதன் பலன்களும்

மகா கணபதி ஹோமம் - தடையின்றி செயல்கள் நடைபெறவும், மகாலட்சுமி அருள் பெறவும்  இந்த ஹோமத்தை செய்யலாம்.

சந்தான கணபதி ஹோமம் - நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் இந்த ஹோமம் செய்திட புத்திர பாக்கியம் கிட்டும்.

வித்யா கணபதி ஹோமம் – கல்விக்காக செய்யப்படும்.

மோகன கணபதி ஹோமம் – திருமணம் தடை நீக்கும்.

ஸ்வர்ண கணபதி ஹோமம் - வியாபாரத்தில் லாபம் கிடைக்க செய்யப்படும் ஹோமம்.

நவகிரக ஹோமம் - நவகிரகங்களினால் ஏற்படக் கூடிய பதிப்புகள் விலகவும், நன்மைகள் ஏற்படும் செய்யலாம்.

லட்சுமி குபேர மகாலட்சுமி ஹோமம் – இந்த ஹோமத்தை செய்வதால், பரம ஏழையும் குபேரனாவான்.

துர்கா ஹோமம் - எதிரிகளின் தொல்லை அகல

சுதர்சன ஹோமம் - கடன் தொல்லை நீங்க,பில்லி சூன்யம் ஏவல்கள் அகல

ஆயுஷ் ஹோமம் - ஆயுள்விருத்தியாகவும்,நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கவும் செய்யப்படும் ஹோமம்.

மிருத்யுஞ்சய ஹோமம்- இதுவும் ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணத்திற்கானது

தன்வந்திரி ஹோமம் - நோய் நிவாரணம் கிடைக்க செய்யக்கூடியது.

ஸ்வயம்வரா ஹோமம்-திருமணதடை அகன்று விரைவில் திருமணம் கைகூட

சந்தான கோபால கிருஷ்ணஹோமம் - குழந்தை பேறு கிடைக்க

மேதா தட்ஷிணாமூர்த்தி ஹோமம் – உயர்கல்வி கிடைக்க வேண்டுவோர் இந்த ஹோமத்தினை செய்யலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close