இங்கே கடல் நீரில் நவகோள்கள்

  கோமதி   | Last Modified : 28 Nov, 2018 10:58 am
here-nine-planets-in-sea-water

நம்முடைய இந்து மதத்தின் பெருமையும் அழகும் அதன் எண்ணற்ற கோவில்களில் அடங்கியுள்ளது. ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு மற்றும் புராணப் பிண்ணனி. தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தேடியே ஒவ்வொருவரும் அலைந்துக் கொண்டிருக்கிறோம். சிலருக்கு திருமண தடை, சிலருக்கோ திருமணமாகியும் குழந்தைகள் இல்லையே என்ற ஏக்கம். இன்னும் சிலருக்கு சரியான வேலை அமையாத குறை என கவலைகள் தனி ரகம். இவை அனைத்திற்குமே ஒரே இடத்தில் தீர்வு கிடைக்கும் என்றால் சந்தோஷம் தானே. அதுவும் அந்த திருத்தலம் மற்றவைகளில் இருந்து வேறுபட்டு நிற்கும் போது அவசியம் சென்று தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கை தானே. 

அந்த வகையில்,தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில் மிகவும் வித்தியாசமானது. ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம், ஆதி ஜெகன்னாதர் கோயில் கொண்டுள்ள சந்நிதி, கடலடைத்த பெருமாள் சந்நிதி என்ற பெயருடன் திகழ்கிறது.இந்தக் கோயில், கடலில் அமைந்துள்ளது என்பது சிறப்புக்குரியது.திருமணத் தடை நீக்கம், குழந்தைப்பேறு, பிரம்மஹத்தி தோஷம், நவக்கிரக தோஷ நிவர்த்தி என ஒரு மனிதனின் வாழ்க்கையை தடம் புரளச் செய்யும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த கோவிலில் தீர்வு கிடைக்கும் என்பதை இங்கு வந்து குவியும் மக்கள் கூட்டத்தில் இருந்து தெரிந்துக் கொள்ள முடிகிறது.  

புராணக் கதை 

ராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, தேவிப்பட்டினத்தில் கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டாராம். ராமபிரான் வழிபட்டுக் கொண்டிருந்த சமயம் அவரின் வழிபாட்டிற்கு இடையூறாக கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினாராம். ஆதி ஜகந்நாதப் பெருமாளும் அந்த வேண்டுகோளை ஏற்று அலையை நிறுத்தி வைத்தாராம். இன்றுவரை இங்கு கடல் அலைகள் அதிகம் காணப்படாததற்கு இதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த இடத்தில்தான் ராமர் சனி தோஷத்தில் இருந்து விடுபட்டார் என்ற வரலாறும் உண்டு.

இங்கே நவக்கிரக சன்னிதி மட்டுமின்றி கடற்கரையில் திலகேஸ்வரர் கோவிலும் உள்ளது. சிவபெருமான் திலகேஸ்வரர் என்ற திருநாமத்துடனும், பார்வதி செளந்தரநாயகியாகவும் காட்சி தருகின்றனர். நீண்ட பாலம் வழியாக நடந்து சென்று தான் கடல் நீருக்குள் இருக்கும் நவக்கிரக சந்நிதியை அடைய வேண்டும். இங்குள்ள நவகோள்களுக்கும், தானியங்களைக் கொண்டு தான் பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கே முன்னோர் சாபம் தீர, அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர். மூதாதையரை வழிபட்டு, சாப விமோசனம் அடைகின்றனர். ஆடி அமாவாசை தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close