ஏன் தெரியுமா? - காலையில எழுந்ததும் முதல் வேலையா படுக்கையைச் சுருட்டனும்

  கோமதி   | Last Modified : 30 Nov, 2018 03:51 pm

do-you-know-why-in-the-morning-the-first-job-is-to-roll-the-bed

“உனக்கு எத்தனைத் தடவை சொல்றது... காலையில எழுந்ததும் முதல் வேலையா படுக்கையைச் சுருட்டுன்னு....தினமும் 100 க்கு 99 வீடுகளில் இந்தப்  பாராயணத்தைக் கேட்டு தான் நாம் வளர்ந்தோம். இப்போது படுக் கையை மடிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை. கட்டிலில் ஒய்யாரமாக படுத்து கொண்டு காலையில் ஹாயாக கிளம்பும் தலைமுறையினரை தான் அதிகம் காணமுடிகிறது.

ஆனால் நம் முன்னோர்கள் சொன்ன அத்தனை விஷயங்களும் பொருள் பொதிந்தவை. எதற்காக அப்படிச் சென்னார்கள்? அந்தக் காலத்தில்  பெரும்பாலும்  அனைவரும் சேர்ந்து ஒரே இடத்தில் படுத்திருப்பார்கள். கிராமங்களில் வீதிக்கு 2 வீடுகளில் திண்ணை இருக்கும். பெரியவர்கள் அங்கு படுக்க.. குழந்தைகளும், பெண்களும் ஒரே இடத்தில் உறங்குவார்கள்.  ஒருவர் ஓர் இடத்தில் தொடர்ந்து அதிக நேரம் இருக்கும்போது, அந்த இடத்தில், அவருடைய ஒளி உடலின் தன்மை சிறிது நேரம் அங்கே இருக்கும். மிருகங்கள் இதை உணர்ந்துகொள்ளும் சக்தி படைத்தவை. அதிலும் காட்டு விலங்குகள்  ஒரு மனிதன்  காட்டில் ஓர்  இடத்தில்  தங்கி  சென்றால் மனிதனின் வாசத்தையும் அந்த இடத்தின் அதிர்வையும் வைத்து உணர்ந்து கொள்ளும் அபாரசக்தி படைத்தவை.   

நீங்கள் சாதாரணமாக ஒரே இடத்தில் தொடர்ந்து 6 அல்லது 7 மணி நேரம்  அமர்ந்தோ படுத்தோ இருந்தால் அங்கிருந்து எழுந்த பிறகும் உங்களின் ஒளி உடலின் தன்மை அந்தப் படுக்கையில் இருக்கும். அப்படி இருக்கும் போது இரவு முழுவதும் நாம் படுத்த படுக்கையும், போர்வையும் மடித்து வைக்காமல் இருக்கும் போது அதை மிதித்து செல்வதற்கு வாய்ப்பு அதிகம். அதிலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் படுக்கை அவர்களுக்கு குதித்து விளையாடும் இடம்தான்.இந்த நிலையில் நாம் மீண்டும் அதே படுக்கையில் அன்றிரவு படுக்கும் போது நமது ஆரோக்கியம் நிச்சயம் பாதிக்கும். உறக்கம் ஆழ்ந்த நிலையில் இருக்காது. அதனால் தான் நாம் புதிய இடங்களுக்குச் செல்லும் போது அனைத்து வசதிகளும் இருந்தாலும், அதிக களைப்பு இருந்தாலும் நமக்கு தூக்கம் வராது. தேவையற்ற கனவுகளும் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்க வாய்ப்புண்டு.அதனால் தான் உங்கள் படுக்கையை இன்னொருவர் பயன்படுத்தக்கூடாது, ஒருவர் உடுத்திய ஆடைகளை இன்னொருவர் உடுத்தக்கூடாது என்று சொல்கிறார்கள். 

ஆழ்ந்த உறக்கம் என்பது ஆரோக்யத்தை அடிப்படையாக கொண்டது. ஆரோக்யம் சீராக இருந்தால் மனம் அமைதியடையும். மனம் அமைதி என்பது இல்லத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மகிழ்ச்சியான இல்லத்தில் அன்பு நிறைந்த கடவுளின் ஆதிக்கமும் இருக்கும். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.